No Entry வழியே சென்ற காரை தடுத்த காவலாளி மீது சரமாரி தாக்குதல்! அதிர்ச்சி வீடியோ
மாமல்லபுரத்தில் அமைந்துள்ள ஐந்துரதம் அருகேயுள்ள வாகன நிறுத்துமிடத்தில் நோ பார்க்கிங் வழியாக சென்ற காரை தடுத்து நிறுத்திய வாகன நிறுத்துமிட காவலரை, காரில் வந்த 2 பெண்கள் உள்பட நான்குபேர் அடித்து உதைக்கும் வீடியோ காட்சி ஒன்று சமுக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்துக்கு ஞாயிற்றுகிழமையான நேற்று முன்தினம் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து சென்றனர். இந்நிலையில், ஐந்துரதம் புராதன சின்னம் அருகில் 2 பெண்கள் உள்பட 4 பேர் கொண்ட குடும்பத்தினர் இருந்த கார் ஒன்று அங்கு நோ பார்க்கிங் வழியாக காரை பார்க் செய்ய செய்ய முயன்றது. இதனால், அங்கு பணியிலிருந்து தனியார் காவலர் ஏழுமலை என்பவர், காரை அருகில் உள்ள வாகன நிறுத்துமிடத்தில் நிறுத்துமாறும் மற்றும் நோ என்ட்ரி வழியாக கார் செல்லக்கூடாது எனக்கூறி காரை வழி மறித்து நின்றார். ஆனால், காரிலிருந்த நபர்கள் தனியார் காவலரை இடிப்பது போன்று சென்று நோ என்ட்ரி வழியா செல்ல முயன்றனர். இதனால், காரில் வந்தவர்களை நோக்கி வாகன நிறுத்துமிட பணியாளர் ஏழுமலை ஏதோ திட்டியதாக தெரிகிறது.
NO ENTRY வழியாகச் சென்ற கார்.. தடுத்த காவலாளி மீது தாக்குதல்!#Chengalpattu #CarDrive #Security #Attack #KumudamNews24x7 pic.twitter.com/Y3SHc3pI7u
— KumudamNews (@kumudamNews24x7) October 21, 2024
இதையடுத்து, காரிலிருந்து இறங்கிய 2 பெண்கள் தகாத வார்த்தைகளால் திட்டுகிறாயா எனக்கூறி ஆவேசமடைந்து, சாலையின் நடுவே ஏழுமலையை சரமாரியாக அடித்து உதைத்தனர். மேலும், காரில் உடன் வந்த 2 ஆண்களும் அவர்களுடன் சேர்ந்து வாகன நிறுத்துமிட காவலரை கடுமையாக தாக்கினர். இதனால், பதிலுக்கு காவலரும் தாக்க முயற்சித்ததாக தெரிகிறது. இதையடுத்து, 4 பேரும் ஒன்று சேர்ந்து அவரை தாக்கினர். மேலும், தனியார் காவலரிடமிருந்த 2 அடி நீளம் கொண்ட பிளாஸ்டிக் பைப்பை பிடுங்கி, அந்த பைப் உடையும் அளவுக்கு அவரை தாக்கினர். மேலும், அவரது சட்டையை கிழித்தனர்.
இந்த கை கலப்பு சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர், அவ்வழியாக சாலையில் சென்ற நபர்கள் காரில் சுற்றுலா வந்து 4 பேரையும் சமாதானம் செய்தனர். மேலும், காவலரையும் மீட்டு அனுப்பிவைத்தனர். இதையடுத்து, காரில் வந்த நபர்கள் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். இச்சம்பவத்தை, அந்த வழியாக சென்ற மற்றொரு சுற்றுலா பயணி ஒருவர் எடுத்த வீடியோ சமுக வலைதளத்தில் வைராலாகி வருகிறது. இச்சம்பவம் தொடர்பாக, புகார் ஏதும் வழங்கப்படவில்லை என காவல்துறையினர் தெரிவித்தனர்.