அதிமுக MLA-க்களிடம் பேரம் - டிஜிபி அலுவலகத்தில் அதிமுக புகார்
Jul 17, 2026, 16:40 IST1784286600323
அதிமுக எம்.எல்.ஏக்களிடம் குதிரை பேரம் நடைபெற்றதாக கூறி டிஜிபி அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதிமுக கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தி, எம்பி இன்பதுரை ஆகியோர் டிஜிபி அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எம்பி இன்பதுரை, “குதிரை பேரத்துக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும். லஞ்ச ஒழிப்புத்துறை நடவடிக்கை எடுக்காததால் டிஜிபியிடம் புகார் அளித்துள்ளோம். 6 அதிமுக எம்.எல்.ஏக்களை விலைக்கு வாங்கியுள்ளனர். அரசை விமர்சிப்பவர்களை கைது செய்ய காவல்துறையை தவெக அரசு ஏன் அடியாளாக பயன்படுத்துகிறது? சமூக வலைதள பதிவுக்காக வழக்கறிஞர் இந்திராணியை கைது செய்வதா? அவதூறு வழக்கு தொடுப்பதற்கு பதிலாக சட்டத்தை தவறாக பயன்படுத்தி அச்சுறுத்துகிறார்கள். தவறான தகவலை பரப்பினால் அவதூறு வழக்கு தொடரட்டும்.

