#BREAKING திமுகவில் இணைய ரூ.50 கோடி வரை பேரம் - ஆதாரத்தை வெளியிட்ட தவெக எம்எல்ஏ
தன்னிடம் சிலர் குதிரைபேரத்தில் ஈடுபட்டதாக ஸ்ரீவைகுண்டம் தவெக எம்எல்ஏ சரவணன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
முதல்வர் விஜய் தலைமையிலான ஆட்சியை கவிழ்ப்பதற்காக தவெக எம்எல்ஏக்களை இழுக்க பேரம் பேசியதாக சென்னை அரும்பாக்கத்தைச் சேர்ந்த திருநாவுக்கரசு, மேடவாக்கத்தைச் சேர்ந்த தியாகராஜன் மற்றும் திருச்சியைச் சேர்ந்த நரேஷ் உள்பட 9 பேரை போலீசார் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் தி.மு.க முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்பு இருப்பதாக கூறி சம்மன் அனுப்பட்ட நிலையில் திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் செந்தில் பாலாஜி இதுவரை ஆஜராகவில்லை.
இந்நிலையில் தன்னிடம் சிலர் குதிரைபேரத்தில் ஈடுபட்டதாக ஸ்ரீவைகுண்டம் தவெக எம்எல்ஏ சரவணன் குற்றஞ்சாட்டியுள்ளார். திமுகவில் இணைய ரூ.50 கோடி வரை பேரம் பேசப்பட்டதாகவும், பேரத்திற்கு ஒத்துக்கொள்ளவில்லை என்பதால் தன்னை மிரட்டி வருவதாகவும் சரவணன் கூறியுள்ளார். மேலும் தன்னிடம் பேரம் பேசியவரின் புகைப்படத்தையும் அதற்கான ஆடியோ ஆதாரத்தையும் வெளியிட்டார் சரவணன்.

