விஜயபாஸ்கர் படத்துடன் பேனர்- விளையாட்டு அதிகாரி சஸ்பெண்ட்

 
விஜயபாஸ்கர்

அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் படத்துடன் தடகளப் போட்டிக்கான பிளக்ஸ் பேனர் வைத்த விவகாரத்தில் திருச்சி மாவட்ட விளையாட்டு அதிகாரி வேல்முருகன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

விளையாட்டு போட்டிக்காக அண்ணா விளையாட்டு அரங்கில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் பட பிளக்ஸ் வைத்த திருச்சி மாவட்ட விளையாட்டு அலுவலர் வேல்முருகன் அதிரடி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். அதிமுக முன்னாள் அமைச்சரை வரவேற்று பேனர் வைத்த நிலையில், திருச்சி மாவட்ட நிர்வாகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.


திருச்சி அண்ணா விளையாட்டு அரங்கில், மாநில அளவிலான தடகளப் போட்டி கடந்த மூன்று நாட்களாக நடைபெற்றது. இதையடுத்து, அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கரை வரவேற்று அண்ணா விளையாட்டு அரங்கில் பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன. இந்த சம்பவத்தின் காரணமாக, திருச்சி மாவட்ட விளையாட்டு அதிகாரி வேல்முருகன் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றனர். விடுதி காப்பாளர் கண்ணன் பொறுப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.