சிவகாசியில் உட்கட்சி பூசல்.... அமைச்சர் கீர்த்தனா பங்கேற்ற நிகழ்ச்சி பேனர் கிழிப்பு

 
அ

சிவகாசி அருகே அரசு நிகழ்ச்சிக்கு அழைப்பு இல்லாததால் தவெக மாவட்ட செயலாளரின் ஆதரவாளர்கள் அமைச்சர் கீர்த்தனாவிடம் கேள்வி எழுப்பினர்.

விருதுநகரில் முதலமைச்சர் விஜயின் பிறந்தநாள் விழாவை அமைச்சர் கீர்த்தனா ஆதரவாளர்கள் ஒரு பிரிவாகவும், மாவட்ட செயலாளர் மாரிச்செல்வம் ஆதரவாளர்கள் மற்றொரு பிரிவாகவும் கொண்டாடினர். விசுவநத்தம் பகுதியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி அமைச்சர் கீர்த்தனா தலைமையில் நடைபெற்றது. இதற்காக அங்கு வந்த அமைச்சர் கீர்த்தனா முன், மாவட்ட செயலாளர் மாரிச்செல்வம் ஆதரவாளர்கள் தகராறில் ஈடுபட்டனர். அரசு நிகழ்ச்சிக்கு தவெக மாவட்ட செயலாளர் அழைக்கப்படாதது ஏன் என? அவரது ஆதரவாளர்கள் அமைச்சர் கீர்த்தனாவிடம் கேள்வி எழுப்பினர்.


அமைச்சர் கீர்த்தனா- தவெக விருதுநகர் மாவட்ட செயலாளர் மாரிச்செல்வம் இடையே நிலவிய மோதலின் ட்தொடர்ச்சியாக அரசு நிகழ்ச்சிக்கு அழைக்கவில்லை எனக் கூறப்படுகிறத். இதனிடையே கீர்த்தனா பங்கேற்கும் அரசு நிகழ்ச்சிக்காக, அவரை வரவேற்று  நிகழ்ச்சி நடக்கும் மண்டபத்திற்கு வெளியே அமைச்சரின் ஆதரவாளர்கள் வைத்திருந்த பேனரையும் கிழித்தனர்.