முதலமைச்சர் விஜயை வரவேற்க விஜயவாடாவில் பேனர்
Oct 12, 2026, 20:06 IST1791815789396
தமிழ்நாடு முதலமைச்சர் விஜயை வரவேற்க விஜயவாடாவில் பேனர் வைக்கப்பட்டுள்ளது.
📌தமிழ்நாடு முதலமைச்சர் விஜயை வரவேற்க விஜயவாடாவில் வைக்கப்பட்டுள்ள பேனர்! pic.twitter.com/zk3kSKw8Bi
— சாய் (@saijegadheeshh) October 12, 2026
முதலமைச்சர் விஜய் ஆந்திரா செல்ல உள்ள நிலையில், பயணத்திட்டம் வெளியாகியுள்ளது. மாலை 3.30 மணிக்கு ஆந்திராவின் கன்னாவரம் விமானநிலையம் சென்றடைகிறார் முதலமைச்சர் விஜய். முதல் நிகழ்வாக மாலை 4.15 மணிக்கு ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவை சந்திக்கிறார். பின்னர் மாலை 6 மணிக்கு கனகதுர்கா கோவிலுக்கு சென்று வழிபாடு மேற்கொள்கிறார். விஜயவாடா உத்சவ் 2.0 மற்றும் கிருஷ்ணா நீர் பங்கீடு ஆகியவற்றிர்காக நாளை ஆந்திர மாநிலம் விஜயவாடாவுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொள்ளும் தமிழ்நாடு முதலமைச்சர் விஜயை வரவேற்க விஜயவாடாவில் பிரமாண்ட பேனர் வைக்கப்பட்டுள்ளது.

