ஜனவரி மாதத்தில் வங்கிகள் மொத்தம் 15 நாட்கள் செயல்படாது..!

 
1 1

ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள விடுமுறைப் பட்டியலில், எந்தெந்த மாநிலங்களில் எந்தெந்த நாட்களில் வங்கிகள் மூடப்பட்டிருக்கும் என்ற முழு விவரங்கள் உள்ளன. இந்த விடுமுறைகள் அனைத்து மாநிலங்களுக்கும் பொருந்தாது. குறிப்பிட்ட மாநிலங்களில் மட்டும் கொண்டாடப்படும் பண்டிகைகள் அல்லது சிறப்பு தினங்களுக்காக அந்தந்த இடங்களில் வங்கிகள் மூடப்படும்.

2026 ஜனவரி மாத விடுமுறை நாட்கள் :

  • ஜனவரி 1: ஆங்கிலப் புத்தாண்டு - சென்னை உட்பட பெரும்பாலான மாநிலங்களில் வங்கிகள் செயல்படாது.
  • ஜனவரி 2: புத்தாண்டு கொண்டாட்டம் மற்றும் மன்னம் ஜெயந்தி - மிசோரம் மற்றும் கேரளா மாநிலங்களில் மட்டும்.
  • ஜனவரி 3: ஹஸ்ரத் அலி பிறந்தநாள் - உத்தரப்பிரதேச மாநிலத்தில் மட்டும்.
  • ஜனவரி 4: ஞாயிற்றுக்கிழமை - நாடு முழுவதும் வார விடுமுறை.
  • ஜனவரி 10: இரண்டாவது சனிக்கிழமை - நாடு முழுவதும் வங்கி விடுமுறை.
  • ஜனவரி 11: ஞாயிற்றுக்கிழமை - நாடு முழுவதும் வார விடுமுறை.
  • ஜனவரி 12: சுவாமி விவேகானந்தர் பிறந்தநாள் - மேற்கு வங்காள மாநிலத்தில் மட்டும்.
  • ஜனவரி 14: மகர சங்கராந்தி மற்றும் மாக் பிஹு - குஜராத், ஒடிசா மற்றும் அஸ்ஸாம் மாநிலங்களில் மட்டும்.
  • ஜனவரி 15: பொங்கல் மற்றும் சங்கராந்தி - தமிழ்நாடு, ஆந்திரா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் விடுமுறை.
  • ஜனவரி 16: திருவள்ளுவர் தினம் - தமிழகத்தில் மட்டும் வங்கிகள் செயல்படாது.
  • ஜனவரி 17: உழவர் திருநாள் - தமிழகத்தில் மட்டும் வங்கிகள் செயல்படாது.
  • ஜனவரி 18: ஞாயிற்றுக்கிழமை - நாடு முழுவதும் வார விடுமுறை.
  • ஜனவரி 23: நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பிறந்தநாள் - மேற்கு வங்காளம் மற்றும் ஒடிசா மாநிலங்களில் மட்டும்.
  • ஜனவரி 24: நான்காவது சனிக்கிழமை - நாடு முழுவதும் வங்கி விடுமுறை.
  • ஜனவரி 25: ஞாயிற்றுக்கிழமை - நாடு முழுவதும் வார விடுமுறை.
  • ஜனவரி 26: குடியரசு தினம் - நாடு முழுவதும் தேசிய விடுமுறை.

இந்த வங்கி விடுமுறைகள் ஒவ்வொரு மாநிலத்திற்கும் மாறுபடும். மேலும், அனைத்து வங்கி நிறுவனங்களும் இந்த விடுமுறைகளைக் கடைப்பிடிப்பதில்லை. குறிப்பிட்ட மாநிலங்களில் கொண்டாடப்படும் பண்டிகைகள் அல்லது சிறப்பு அறிவிப்புகளின் அடிப்படையிலும் வங்கி விடுமுறைகள் அமையும். உதாரணமாக, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாட்டில் வங்கிகள் மூடப்பட்டிருக்கும். ஆனால், மற்ற மாநிலங்களில் அதே காரணத்திற்காக வங்கிகள் மூடப்படாது. எனவே, உங்கள் வங்கிக்குச் செல்வதற்கு முன் அந்தந்த மாநிலத்தின் விடுமுறைப் பட்டியலைச் சரிபார்த்துக் கொள்வது நல்லது.

தமிழகத்தின் பொங்கல் கொண்டாட்டம்: 4 நாட்கள் தொடர் விடுமுறை : 

தமிழகத்தைப் பொறுத்தவரை ஜனவரி மாதத்தின் மிக முக்கியமான விடுமுறை காலம் பொங்கல் பண்டிகைதான். ஜனவரி 15-ஆம் தேதி, வியாழன் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னை உள்ளிட்ட பகுதிகளில் விடுமுறை தொடங்குகிறது. தொடர்ந்து ஜனவரி 16-ஆம் தேதி திருவள்ளுவர் தினம், ஜனவரி 17-ஆம் தேதி உழவர் திருநாள் என வரிசையாக விடுமுறை தினங்கள் வருகின்றன. ஜனவரி 18-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை என்பதால், தமிழகத்தில் ஜனவரி 15 முதல் ஜனவரி 18 வரை தொடர்ந்து 4 நாட்கள் வங்கிகள் செயல்படாது. இந்த காலகட்டத்தில் பணத்தேவை அதிகமாக இருக்கும் என்பதால் ஏடிஎம்களில் பணம் தட்டுப்பாடு ஏற்படவும் வாய்ப்புள்ளது.

சுதந்திர தின வாரம் :

மாத இறுதியில் மற்றொரு நீண்ட விடுமுறை காத்திருக்கிறது. ஜனவரி 24-ஆம் தேதி நான்காவது சனிக்கிழமை என்பதால் வங்கிகளுக்கு விடுமுறை. அடுத்த நாள் ஜனவரி 25 ஞாயிற்றுக்கிழமை. அதனைத் தொடர்ந்து ஜனவரி 26-ஆம் தேதி (திங்கள்) நாடு முழுவதும் குடியரசு தின விழா கொண்டாடப்படுவதால் வங்கிகளுக்குத் தேசிய விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மாத இறுதியில் சனி முதல் திங்கள் வரை 3 நாட்கள் வங்கிகள் இயங்காது.