வங்கிகளுக்கு அனைத்து சனிக்கிழமைகளிலும் விடுமுறையா... உண்மை என்ன?

 
Q

மத்திய அரசு தரப்பில் புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது என தகவல் பரவியது. இதன்படி, பாரத ஸ்டேட் வங்கி (எஸ்.பி.ஐ.) உள்ளிட்ட பொதுத்துறை வங்கிகள் இனி சனிக்கிழமைகளில் செயல்படாது. திங்கள் முதல் வெள்ளி வரை என வாரத்தில் 5 நாட்கள் மட்டுமே வங்கிகள் செயல்படும். இந்த நடைமுறை இந்த வாரம் முதல் அமலுக்கு வருகிறது என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இந்த நிலையில், அனைத்து சனிக்கிழமைகளும் பொதுத்துறை வங்கிகளுக்கு விடுமுறை என வெளியான தகவல் வதந்தி என்று தெரிய வந்துள்ளது. இதனை பத்திரிகை தகவல் அலுவலகம் வெளியிட்ட செய்தி உறுதிப்படுத்தி உள்ளது. விடுமுறை தொடர்பாக பரவும் செய்தி போலியானது. அதுபோன்ற அறிவிப்பு எதனையும் மத்திய நிதி அமைச்சகம் வெளியிடவில்லை என்றும் தெரிவித்து உள்ளது.