பனியன் உற்பத்தியாளர்கள் நாளை முதல் வேலைநிறுத்தம்!!

 
ytn

நூல் விலை அதிகரிப்பை கண்டித்து பனியன் உற்பத்தியாளர்கள் நாளைமுதல் வேலைநிறுத்தம்  போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். 

மீண்டும் நூல் விலை உயர்வு.. திருப்பூர் பின்னலாடை தொழிலாளர்கள் கவலை..

கைத்தறி, விசைத்தறி, ஆயத்த ஆடை தயாரிப்பு உள்ளிட்ட துணி சார்ந்த அனைத்து தொழில்களையும் பாதிக்கும் வகையில் நூல் விலை அதிகரித்து வருகிறது. கொரோனா ஊடரங்கு காலத்தில் பின்னலாடைத் தொழில் முடங்கிப்போன நிலையில் நூல் விலை உயர்வு மேலும் பாதிப்படைய செய்துள்ளது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு நூல் விலை அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு 50 சதவீதம் அளவிற்கு உயர்ந்து கிலோ ரூ. 360 முதல் ரூ 400  வரை  அதிகரித்தது.  இந்த ஆண்டும்  நூல் தரம் வாரியாக  ரூ 400 முதல் ரூ. 470 ரூபாய் வரை விற்பனையாகி வருகிறது. 

textile

இந்நிலையில்  நூல் விலை உயர்வை கட்டுப்படுத்த கோரி பனியன் உற்பத்தியாளர்கள் நாளை முதல் இரண்டு நாள் வேலை நிறுத்தம் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.  பல்லடம் மற்றும் திருப்பூர் பின்னலாடை உற்பத்தியாளர்கள் நாளை மற்றும் நாளை மறுநாள் இரண்டு நாட்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளனர்.  10 ஆயிரம் தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ள நிலையில், ரூ.  12 கோடி இழப்பு ஏற்படும் என்று தெரிகிறது.  பஞ்சு பதுக்குதல், ஏற்றுமதிக்கு தடை விதித்தல் மற்றும் நூல் விலை உயர்வை கட்டுப்படுத்துதல் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து போராட்டம் நடத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.