#BREAKING வெளிமாநிலங்களுக்கு ஜல்லி, குண்டு கற்கள், எம்சாண்ட் கொண்டு செல்ல தடை

 
முதல்வர் நாற்காலியில் விஜய்!

தமிழ்நாட்டில் இருந்து பிற மாநிலங்களுக்கு கருங்கல் மற்றும் கல் ஜல்லி உள்ளிட்ட துணைப்பொருட்கள் கொண்டு செல்ல மூன்று மாதங்களுக்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது.

முதல்வர் விஜய் ஆலோசனை தொடர்ந்து அமைச்சர் பிரபு அதிரடி நடவடிக்கையாக தமிழ்நாட்டிலிருந்து பிற மாநிலங்களுக்கு சாதாரண கற்கள், ஜல்லி மற்றும் எம்-சாண்ட் (M-Sand) உள்ளிட்ட கனிமங்களை கொண்டு செல்ல 3 மாதங்களுக்கு தற்காலிக தடை விதித்து புவியியல் மற்றும் சுரங்கத்துறை இயக்குநர் உத்தரவிட்டுள்ளார். எல்லையோர மாவட்டங்களில் தீவிரமாக கண்காணிக்க மாவட்ட ஆட்சியர்கள், எஸ்.பி-க்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த தற்காலிக தடை உத்தரவு உடனடியாக அமலுக்கு வருவதாகவும் கூறியுள்ளது. 

புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளுக்கு மட்டும் இந்தத் தடையிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் கனிம வளங்களை பாதுகாக்கவும், மாநிலத்தின் உள்கட்டமைப்பு மற்றும் கட்டுமானத் தேவைகளுக்கு முன்னுரிமை வழங்கவே இத்தகைய முடிவு  எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.