#BREAKING புற்றுநோய் வரும்- கலர் அப்பளம் விற்பனைக்கு தடை

 
s

கலர் அப்பளத்தை அடிக்கடி சாப்பிட்டால் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புள்ளதாக உணவு பாதுகாப்புத்துறை எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், தமிழ்நாட்டில் கலர் அப்பளம் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் அதிக நிறமூட்டிகளை பயன்படுத்தி விற்கப்படும் கலர் அப்பளம் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கண்ணைக் கவரும் கலர் அப்பளத்தை குழந்தைகளுக்கு வாங்கிக் கொடுக்க வேண்டாம், அடிக்கடி கலர் அப்பளம் சாப்பிட்டால் செரிமான பிரச்னை, சிறுநீரக பாதிப்பு, புற்றுநோய் வருவதற்கு வாய்ப்புள்ளது என உணவு பாதுகாப்புத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.


முக்கியமாக, இந்த கலர் அப்பளத்தை சாப்பிட்டால் குழந்தைகளுக்கு அலர்ஜி மற்றும் கவன சிதறல் உண்டாகலாம் எனக் கூறியுள்ள உணவு பாதுகாப்புத் துறை, பாரம்பரியமாக உளுந்து, அரிசி உள்ளிட்டவையில் தயாரிக்கக் கூடிய அப்பளத்தை வாங்கி சாப்பிட வேண்டும். நிறமூட்டிகளை பயன்படுத்தி விற்கப்படும் கலர் அப்பளம் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கக் கூடும் என எச்சரிக்கை விடுத்துள்ளது.