கனரக வாகனங்கள் தென்காசிக்குள் நுழைய தடை! வெளியான பரபரப்பு அறிவிப்பு

 
container lorry

தென்காசி மாவட்டத்திற்குள் காலை 6 மணி முதல் 10 மணி வரையும், மாலை 3 மணி முதல் இரவு 7 மணி வரையும் கனரக வாகனங்கள் இயக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

தென்காசி மாவட்டத்தில் கனிமவளக் கனரக வாகனங்கள் மற்றும் பிற கனரக வாகனங்களுக்கு போக்குவரத்து நெரிசல், சாலைப் பாதுகாப்பு மற்றும் கனிமவளப் பாதுகாப்புக்காக பல்வேறு கட்டுப்பாடுகள் மற்றும் விதிகள் நடைமுறை படுத்தப்பட்டுவருகின்றன. அந்த வகையில் தற்போது தென்காசி மாவட்டத்திற்குள் காலை 6 மணி முதல் 10 மணி வரையும், மாலை 3 மணி முதல் இரவு 7 மணி வரையும் கனரக வாகனங்கள் இயக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.  தடையை மீறி இயக்கப்படும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சங்கர் எச்சரிக்கை விடுத்துள்ளார். அனுமதிக்கப்பட்ட எடையை மட்டுமே ஏற்றிச் செல்ல வேண்டும், சாலையோரங்களில் ஒழுங்கற்ற முறையில் வாகனங்களை நிறுத்தக் கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.