வைகாசி விசாகம்- திருச்செந்தூரில் மீன் சமைக்க தடை

 
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில்

திருச்செந்தூர் கோவில் வளாகத்தில் மீன் சமைத்து சாப்பிட்டு விரதத்தை முடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

Devotees not allowed to bathe in the sea at Thiruchendur temple today and  tomorrow | இன்றும், நாளையும் திருச்செந்தூர் கோவில் கடலில் பக்தர்கள் புனித  நீராட தடை

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ஆண்டுதோறும்  வைகாசி மாதத்தில் வசந்த திருவிழா நடைபெறும். இவ்விழா மே 13 ஆம் தேதியான நேற்று தொடங்கி 21 ஆம் தேதி வரை 10 நாட்கள் வெகு விமர்சியாக நடைபெறுகிறது. விழா நாள்களில் ஒவ்வொரு நாளும் அதிகாலை நடை திறக்கப்பட்டு, விஸ்வரூப தரிசனம், உதயமாா்த்தாண்ட அபிஷேகம் நடைபெறும். மதியம் உச்சிகால பூஜையைத் தொடா்ந்து சுவாமி ஜெயந்திநாதா் வள்ளி, தெய்வானையுடன் தங்க சப்பரத்தில் எழுந்தருளி பிரகாரத்தில் ராஜகோபுர வாசல் எதிரேயுள்ள வசந்த மண்டபத்தில் எழுந்தருள்வார்.  வருகிற 22 ஆம் தேதி வைகாசி விசாகம் திருவிழா திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் நடைபெற உள்ளது. 

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களது whatsapp சேனலை Follow செய்யுங்கள்:

https://whatsapp.com/channel/0029VaDmE2aGehELVeirsJ2r

வைகாசி விசாகத்திற்கு விரதம் இருப்போர் திருச்செந்தூர் கோவிலில் மீன் உணவுடன் விரதத்தை முடிப்பது வழக்கம். ஆனால் கோவில் வளாகத்தில் மீன் சமைப்பது, அசைவம் சாப்பிடுவது ஆக விதிகளுக்கு எதிரானது என்பதால், திருச்செந்தூர் கோவில் வளாகத்தில் மீன் சமைத்து சாப்பிட்டு விரதத்தை முடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதாக கோவில் ஆணையர் கார்த்திக் அறிவித்துள்ளார்.