#BAN NEET : ராகுலிடம் கையொப்பம் வாங்கிய அனிதா சகோதரர்..!!
Updated: Oct 10, 2026, 21:34 IST1791648263063
நீட் தேர்வுக்கு எதிரான பதாகையை காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தியிடம் கொடுத்து கையொப்பம் வாங்கினார் அனிதாவின் சகோதரர் மணி ரத்னம்.
நீட் தேர்வு பாதிப்பால் தன்னுயிரை மாய்த்துக் கொண்ட மாணவி அனிதாவின் சகோதரர் மணி ரத்னம் வைத்த கோரிக்கையை ஏற்று, மக்களவை எதிர்க்கட்சித் தலைவரான ராகுல் காந்தி நீட் தேர்வுக்கு எதிரான பதாகையில் கையெழுத்திட்டுத் தனது ஆதரவை வெளிப்படுத்தியுள்ளார். ‘BAN NEET’ என்ற ஹேஷ்டேகடன் நடைபெற்ற இந்தக் கையெழுத்து இயக்கத்தில் பங்கேற்ற ராகுல் காந்தி, மாணவர்களின் நலனுக்காக நீட் தேர்வுக்கு எதிரான போராட்டங்களில் துணை நிற்பதாக உறுதி அளித்துள்ளார்.

