தொட்டபெட்டா செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை

 
thottabetta thottabetta

தொட்டபெட்டா மலை சிகரம் செல்ல சுற்றுலா பயணிகளுக்கு  நாளை (மே 16) முதல் அடுத்த 7 நாட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

tn

தொட்டபெட்டா  நீலகிரி மாவட்டத்தில் உள்ள மிக உயரமான மலை ஆகும். உதகமண்டலத்தில் இருந்து 8 கிலோமீட்டர் தொலைவில் இதன் உயரம் 2623 மீட்டர் ஆகும். மிக முக்கியமான சுற்றுலாத் தலங்களில் ஒன்றான  இம்மலையின் உச்சியில் இருந்து சாமுண்டி மலையைப் பார்க்க முடியும். இந்த சுற்றுலா தலத்துக்கு வெளிமாநிலங்கள், மற்றும் பிற மாவட்டங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் வந்து செல்வர்.

இந்நிலையில் தொட்டபெட்டா மலை சிகரம் செல்ல சுற்றுலா பயணிகளுக்கு  நாளை (மே 16) முதல் அடுத்த 7 நாட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ‘FAST TAG’ சோதனைச் சாவடியை மாற்றி அமைக்கும் பணி நடைபெற இருப்பதால் தொட்டபெட்டா மலை சிகரத்திற்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறை தடை விதித்துள்ளது.