#BREAKING திருவிழாவில் பலூன்களுக்கு காற்று நிரப்பும் சிலிண்டர் வெடித்து விபத்து- 3 பேர் பலி

 
வ் வ்

மணலூர்பேட்டை ஆற்றுத் திருவிழாவில் பலூன்களுக்கு காற்று நிரப்பும் சிலிண்டர் வெடித்து மூவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Image


கள்ளக்குறிச்சி மாவட்டம் மணலூர்பேட்டை ஆற்றுத் திருவிழாவில் பலூன்களுக்கு காற்று நிரப்பும் சிலிண்டர் வெடித்து மூவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்த நிலையில், சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சிலிண்டர் வெடித்து விபத்து நடந்த இடத்தில் தடய அறிவியல் துறையினர் ஆய்வு மேற்கொண்டுவருகின்றனர். மேலும் சம்பவம் நடந்த இடத்தில் எம்.பி., மலையரசன், மாவட்ட ஆட்சியர், சரக டி.ஐ.ஜி, எஸ்.பி. ஆகியோர் ஆய்வு மேற்கொண்டுவருகின்றனர். திருவிழாவிற்காக நூற்றுக்கணக்கானோர் ஒரே இடத்தில் கூடியிருந்த நிலையில் கோர விபத்து நடந்துள்ளது. பலூன் கேஸ் சிலிண்டர் வெடித்ததில் ஒரு பெண் உட்பட 3 பேர் உடல் சிதறி பலியானதால் உறவினர்கள் வேதனையில் மூழ்கியுள்ளனர். 

இச்சம்பவத்துக்கு இரங்கல் தெரிவித்துள்ள அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, “கள்ளக்குறிச்சி மணலூர்பேட்டையில் நடைபெற்ற ஆற்றுத் திருவிழாவில் பலூனுக்கு கேஸ் நிரப்பும் ஹீலியம் சிலிண்டர் வெடித்ததில் 4 பேர் உயிரிழந்தனர்,  மேலும் பலர் காயமடைந்துள்ளனர் என்ற செய்தியறிந்து ஆற்றொண்ணா துயரமடைந்தேன். உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் வருத்தங்களையும் தெரிவித்துக் கொள்வதுடன், காயமடைந்தவர்கள் அனைவரும் பூரண நலம்பெற்று விரைவில் வீடு திரும்பவும் இறைவனை வேண்டுகிறேன்.ஆற்றுத் திருவிழா விபத்தில் உயிரிழந்தவர்கள் மற்றும் காயம் அடைந்தவர்கள் அனைவருக்கும் உரிய நிவாரணநிதி உடனடியாக வழங்க வேண்டுமெனவும் இந்த அரசை வலியுறுத்துகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.