68-க்கும் மேற்பட்ட கொள்ளையடித்து ரூ.4 கோடிக்கு ஸ்பின்னிங் மில் வாங்கிய பலே திருடன்

 
கொள்ளையன்

தமிழகம் முழுவதும் 68 இடங்களில் கைவரிசை காட்டிய பலே கொள்ளையன், கொள்ளையடித்த பணத்தில் ரூ.4 கோடி மதிப்பிளான நூற்பாலை, 53 செண்ட் நிலம், 13 லட்சம் மதிப்பிளான கவாஸ்கி பைக், ரூ.4 லட்சம் மதிப்பிளான செல்போன், கார்களை வாங்கியுள்ளார்.

தமிழகம் முழுவதும் தொடர் கொள்ளையில் ஈடுபட்டு வந்த 'ராடுமேன்' மூர்த்தி கைது |  robber rodman murthy arrested - kamadenu.in

கோவை சிங்கநல்லூர், பீளமேடு மற்றும் ராமநாதபுரம் காவல் நிலைய எல்லைகளுக்கு உட்பட்ட குறிப்பாக ரயில்வே தண்டவாளங்களை ஒட்டியுள்ள பூட்டிய வீடுகள் மற்றும் ஆட்கள் குறைவாக உள்ள வீடுகளுக்குள் புகுந்து உள்ளே இருப்பவர்களை கட்டிப்போட்டு நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்குகள் பதிவானது. இது குறித்து மாநகர காவல் ஆணையர் பாலகிருஸ்ணன் உத்தரவின் பேரில் துணை ஆணையர் ஸ்டாலின் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. தொடர்ந்து மூன்று மாதங்களாக பல்வேறு தடயங்களை, சிசிடிவி காட்சிகள் மற்றும் உருவ வரைபடத்தை வைத்து தனிப்படை போலீஸார் பேருந்து மூலம் கோவை வந்த கொள்ளையன் ராடுமேன் மூர்த்தி என்பவரை சுற்றி வளைத்து கைது செய்தனர். இதையடுத்து அவரை தனி இடத்தில் வைத்து விசாரித்த போது பல்வேறு அதிர்ச்சிகரமான தகவல் வெளியானது. 

விசாரணையில் பிடிபட்ட நபர் தேனி மாவட்டம் பெரியகுளத்தை சேர்ந்த மூர்த்தி என்பதும், இவரது பிரியா மதுரை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக இருந்து வருகிறார். தனது உறவினர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்களை கூட்டாக சேர்த்துக் கொண்டு தமிழகம் முழுவதும் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது. குறிப்பாக கடந்த 4 ஆண்டுகளில் கோவை, திருப்பூர், ஈரோடு, மதுரை, விருதுநகர், உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் ரயில்வே தண்டவாளங்கள் அருகே உள்ள வீடுகளை குறித்து கொள்ளை சம்பவங்களை அரங்கேற்றியது தெரியவந்தது. ரயில்வே தண்டவாளத்தில் நடந்துச் சென்றால் சிசிடிவி கேமரா, ஆட்கள் நடமாட்டம் இருக்காது மற்றும் நாய்கள் தொல்லை இல்லை என்பதால் இந்த முறையை கையாண்டு கொள்ளையில் ஈடுபட்டுள்ளார். மேலும் கதவு மற்றும் லாக்கரை உடைக்க இரும்பு ராடை மட்டுமே பயன்படுத்தி வந்த மூர்த்தி எப்போது மாஸ்க் மற்றும் ஒரே மாதிரியான உடையை அணிந்து திருடுவதை வாடிக்கையாக வைத்துள்ளார். பேருந்து மூலம் கொள்ளையடிக்கும் மாவட்டங்களுக்கு செல்லும் இந்த கும்பல் கொள்ளையடித்து விட்டு மீண்டும் ஏதே சாதாரன வேலைக்கு வந்தவர்கள் போல மீண்டும் சொந்த ஊருக்கு பேருந்து சென்றுள்ளனர். பின்னர் வேறு மாவட்டங்களில் கொள்ளையடிக்க செல்கின்றனர். 

கொள்ளை கும்பலுக்கு தலைவான செயல்படும் மூர்த்தியின் கும்பலில் 7 பேர் உள்ளனர். தனியாக சென்றும், கும்பலாகவும் சென்றும் கொள்ளையடித்து வந்துள்ளனர்,. மேலும் இவர் இதுவரை தமிழகம் முழுவதும் 68 கொள்ளை சம்பவங்களில் சுமார் 1500 க்கும் மேற்பட்ட சவரன் நகைகளை கொள்ளையடித்துள்ளனர். மேலும் தாங்கள் கொள்ளையடித்த நகைகளை உருக்கி விற்பனைச் செய்து அதன் மூலம் விருதுநகர் மாவட்டத்தில் ராஜலட்சுமி மில் என்ற நூற்பாலையை ரூ.4 கோடிக்கு வாங்கியுள்ளனர். மேலும் விருதுநகர் பேருந்து நிலையம் அருகே ரூ.1.5 கோடி மதிப்பிளான 53 செண்ட் நிலத்தையும் வாங்கியுள்ளனர். மூர்த்தியிடம் மேற்கொண்ட விசாரணை அடிப்படையில் அவரது கூட்டாணியான அம்சராஜ் (29) என்பவரையும், மதுரை மாவட்டத்தில் வைத்து சுரேஷ் என்பவரை போலீஸார் கைதுச் செய்தனர். 

இது குறித்து கோவை மாநகர துணை ஆணையர் ஸ்டாலின் கூறும் போது : கைது செய்யப்பட்டுள்ள ராடுமேன் மூர்த்தி என்பவர் ஒரே பேட்டனை பயன்படுத்தி தமிழகம் முழுவதும் கொள்ளையடித்து வந்துள்ளார். தமிழகம் முழுவதும் கைப்பற்றப்பட்ட சிசிடிவி காட்சிகளில் மாஸ்க் அணிந்திருப்பது, நடை மற்றும் ஒரே மாதிரியான உடையை வைத்து வரைபட கலைஞர் மூலம் உருவ படத்தை வரைந்தோம். தொடர்ந்து கண்காணித்து கைது செய்துள்ளோம். ரயில்வே தண்டவாளத்திலேயே நடந்துச் சென்று கொள்ளையடிக்கும் வழக்கத்தை கொண்டுள்ளனர். இவர்களது கும்பலை சேர்ந்த 3 பேர் பிடிபட்டுள்ளனர். மேலும் 4 பேரை தனிப்படை போலீஸார் தீவிரமாக தேடி வருகிறோம். கடந்த 4 ஆண்டுகளாக தமிழகம் முழுவதும் கொள்ளையடித்தவர்கள், 2 ஆண்டுகளாக மிகவும் ஆக்டிவாக இருந்துள்ளனர். கோவையில் மட்டுமே சுமார் 376 சவரன் கொள்ளையடித்துள்ளனர். வீட்டில் ஆட்களை கட்டி வைத்து கொள்ளையடிக்கும் போது வேண்டுமென்றே இந்தி போன்ற மாற்று மொழி ஆட்கள் போலவும், சைன் (ஜாடை) மொழியிலும் பேசியுள்ளனர். தற்போது கைதுச் செய்யப்பட்ட மூர்த்தியிடமிருந்து 63 சவரன் நகைகள், 2 கார்கள், ரூ.13 லட்சம் மதிப்புடைய கவாஸ்கி பைக் உள்ளிட்ட 6 இரு சக்கர வாகனங்கள், பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் 4 பேரை தீவிரமாக தேடி வருவதாக தெரிவித்தார்.