பொங்கல் வரை தமிழகத்தில் மழை இருக்கும் - பாலச்சந்திரன் பேட்டி
பொங்கல் பண்டிகை வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தென்மண்டல வானிலை ஆய்வு மையம் இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
தென்மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது வடகிழக்கு பருவமழை நிறைவடைந்துவிட்டதா என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்து பேசிய பாலச்சந்திரன், வடகிழக்கு பருவமழை நிறைவு பெறவில்லை, பொங்கல் வரை தமிழகத்தில் மழை இருக்கும் என கூறினார். 2024ல் 4 புயல்கள் ஏற்பட்டதாகவும், கடந்த ஆண்டைவிட இம்முறை 143 மி.மீ. மழை அதிகம் பெய்துள்ளதாகவும், கூறினார்.
இதனிடையே தமிழகத்தில் இன்று 3 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதாவது நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய 3 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளது. இதேபோல் இன்று முதல் வருகிற 06ம் தேதி வரை தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.