சொந்த பணத்தில் செக்யூரிட்டி தாத்தாவுக்கு வீடு கட்டி கொடுத்த பாலா

 
பாலா

விஜய் தொலைக்காட்சியில் பிரபல நிகழ்ச்சியான ‘கலக்கப் போவது யார்’ நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் பாலா. கலக்க போவது யார் நிகழ்ச்சியை தொடர்ந்து குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக பங்கேற்று தனது காமெடியால் ரசிகர் பட்டாளத்தை ஈர்த்தவர். அதன்பின் பாலாவுக்கு சினிமாவில் நடிக்க வாய்ப்புள்ளது. அத்துடன் பாலா விஜய் டிவியில் நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் ஜொலித்துவருகிறார். 

முதியவருக்கு KPY பாலா செய்த உதவி; நெகிழ்ச்சியில் அசந்து போன நடிகர் ராகவா லாரன்ஸ்..!


இந்நிலையில் தான் சம்பதித்த் பணத்தை ஏழைகளுக்கு பல்வேறு உதவிகளை செய்துவருகிறார். மருத்துவமனை இல்லாத கிராமங்களுக்கு ஆம்புலன்ஸ் வசதி, ஏழை எளிய பெண்களுக்கு ஆட்டோ, வறுமையில் வாடும் மாணவர்களுக்கு லேப்டாப், இளைஞர்களுக்கு பைக் என தனது சொந்த செலவில் இத்தனை உதவிகளையும் செய்து வருகிறார் பாலா.

இந்நிலையில் பாலா தற்போது, தனது வீட்டருகே உள்ள டென்னிஸ் மைதானத்தில் வாட்ச்மேனாக பணிபுரிந்து வரும் முதியவர் ஒருவருக்கு காங்கிரேட் வீடு கட்டிக்கொடுத்துள்ளார். குடிசை வீட்டில் வசித்த அந்த முதியவரின் கனவான காங்கிரேட் வீட்டை கட்டிக்கொடுத்துள்ள பாலாவின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முதியவரின் இந்த புது வீட்டை நடிகர் ராகவா லாரன்ஸ் திறந்து வைத்தார்.