இளம் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த அதிமுக நிர்வாகி- காலையில் கைது மாலையில் விடுவிப்பு

 
ச்

தாம்பரம் அடுத்த  படப்பையில் இளம் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கைதான அதிமுக பிரமுகருக்கு நிபந்தனை ஜாமின் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பாலியல் வழக்கில் கைதான அதிமுக நிர்வாகி.. எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கை

தாம்பரம் அடுத்த படப்பை பகுதியில் இளம் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுந்த புகாரின் பேரில் அதிமுக எம்.ஜி.ஆர்., மன்ற இணை செயலாளர் பொன்னம்பலம் (60). மணிமங்கலம் காவல்துறையால் செய்யப்பட்டார். அவர் மீது, பெண் வன்கொடுமை, ஆபாசமாக பேசுதல், பெண்களை தாக்கியது உள்பட மூன்று பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு, ஸ்ரீபெரும்புதூர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி வினோ, பொன்னம்பலத்திற்கு நிபந்தனை ஜாமின் வழங்கி உத்தரவிட்டுள்ளார்.

வயது மூப்பு காரணமாகவும், பொன்னம்பலத்திற்கு சக்கரை நோய், ரத்த கொதிப்பு உள்ளட்ட நோய் பாதிப்புகள் இருப்பதை சுட்டிக்காட்டி அவர் தரப்பு வழக்கறிஞர்கள் நீதிபதி முன்பு வாதத்தை முன்வைத்த நிலையில் நீதிபதி வினோ நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.