டாக்டர் எஸ்.எஸ்.பத்ரிநாத் மறைவுக்கு வானதி சீனிவாசன் இரங்கல்!!

 
vanathi srinivasan

சங்கர நேத்ராலயா மருத்துவமனையின் நிறுவனர் டாக்டர் எஸ்.எஸ்.பத்ரிநாத் மறைவுக்கு எம்எல்ஏ வானதி சீனிவாசன் இரங்கல் தெரிவித்துள்ளார்.

tn

இதுதொடர்பாக பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள  இரங்கல் செய்தியில், "சங்கர நேத்ராலயா மருத்துவமனையின் நிறுவனர் டாக்டர் எஸ்.எஸ்.பத்ரிநாத் அவர்கள் இயற்கை எய்தினார் என்ற செய்தி கேட்டு வருந்தினேன்.  டாக்டர் எஸ்.எஸ்.பத்ரிநாத் அவர்கள் மறைவு, நம் சமூகத்துக்கும், மருத்துவ உலகுக்கும் பேரிழப்பு.  ஏழை எளிய மக்களுக்கு தரமான கண்  சிகிச்சையை  இலவசமாக வழங்கியவர். 


நாட்டின் உயரிய விருதுகளான பத்ம பூஷன் மற்றும் பத்மஸ்ரீ விருதுகளைப் பெற்றவர்.  அவரை இழந்து வாடும் அவரது நண்பர்களுக்கும் குடும்பத்தாருக்கும் எனது  ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.  ஓம் சாந்தி!" என்று குறிப்பிட்டுள்ளார்.