Bad Girl சர்ச்சை - சென்சார் போர்டு விளக்கம்

 
Bad Girl சர்ச்சை - சென்சார் போர்டு விளக்கம்

Bad girl திரைப்படத்திற்கு தணிக்கை சான்று கேட்டு, இது வரை எந்த விண்ணப்பமும் வரவில்லை என மத்திய அரசின் சென்சார் போர்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் பதிலளித்துள்ளது. 

மோசமான படம் "பேட் கேர்ள்".. பட்டியலினம் என்றால் பா. ரஞ்சித் பொங்கறாரு? அப்ப  பிராமணர்கள்? பிரபலம் நச் | Bad girl Movie will success and what did  bayilwan ranganathan say about Brahmins, Vetrimaran, pa Ranjith - Tamil ...


இயக்குனர் வெற்றிமாறன், அனுராஜ் ஹாசியப் தயாரிப்பில் நடிகை அஞ்சலி, ரம்யா ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள Bad Girl திரைப்படத்தின் டீசர் கடந்த ஜனவரி 26 ம் தேதி வெளியானது. இந்த டீசரில் பிராமண பெண் நாகரீக கலாச்சாரத்துக்கு மாறும் வகையிலும் , பிராமண பெண்களை கொச்சைப்படுத்தும் வகையில் காட்சிகள் இடம்பெற்றுள்ளதாக கூறி, இந்த காட்சிகளை நீக்கும் வரை படத்திற்கு தணிக்கை சான்று வழங்க கூடாது என உத்தரவிடக் கோரி கோவையை சேர்ந்த ராஷ்ட்ரிய சனாதன சேவா சங்கத்தின் தலைவர் ராமநாத் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அதில், இந்த டீசரை வைத்து சமூக வலைதளங்கள், தொலைக்காட்சிகளில் பிராமண இனத்தை தரம் தாழ்த்தி பேசப்பட்டு வருவதாகவும் பிரமாண மக்களின் மனதை புண்படுத்தும் வகையில் காட்சிகள் இடம் பெற்றுள்ளதாவும் குறிப்பிடப்பட்டிருந்தது.

Madras High Court (Timings, History, Entry Fee, Images & Information) -  Chennai Tourism

இந்த மனு நீதிபதி பரத சக்ரவர்த்தி முன் விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் தரப்பில்,  குறிப்பிட்ட சமூகத்தையும், பெண்களையும் தவறாக சித்தரித்து காட்சிகள் அமைப்பது சட்டவிரோதமானது என்பதால் படத்திற்கு சென்சார் சான்று வழங்க கூடாது என வாதிடப்பட்டது. தணிக்கை குழு தரப்பில், bad girl என்ற பெயரில்  தணிக்கை சான்று வழங்க கேட்டு இது வரை எந்த விண்ணப்பமும் வரவில்லை என்றும், இருந்தாலும் மனுதாரரின் மனுவினை சட்டப்படி பரிசீலிக்க படும் என தெரிவிக்கப்பட்டது. இதனை ஏற்றுக்  கொண்ட நீதிபதி இந்த வழக்கினை முடித்து வைத்து உத்தரவிட்டார்.