ஆட்சி கவிழ்ப்பு பின்னணி? செந்தில் பாலாஜி வீட்டில் போலீஸ் சம்மன்!

 
Q

சென்னை அரும்பாக்கத்தைச் சேர்ந்தவர் திருநாவுக்கரசு, 45. இவர், ஐ.பி.டி.எஸ்., என்ற கருத்துக்கணிப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறார். இவரும், திருச்சியைச் சேர்ந்த நரேஷ், 45, சென்னை மேடவாக்கத்தைச் சேர்ந்த தியாகராஜன், 40 ஆகியோரும், த.வெ.க., - எம்.எல்.ஏ.,க்களை இழுக்க பேரம் பேசியதாக குற்றச்சாட்டு எழுந்து உள்ளது.

இது தொடர்பாக, கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை தொகுதி த.வெ.க., - எம்.எல்.ஏ., இளையராஜா அளித்த புகாரின்படி, சென்னை திருவல்லிக்கேணி போலீசார் வழக்கு பதிவு செய்து, திருநாவுக்கரசு உள்ளிட்ட எட்டு பேரை கைது செய்துள்ளனர்.தொடர் விசாரணையில், த.வெ.க., ஆட்சி கவிழ்ப்பு பின்னணியில், கோவை தெற்கு தொகுதி தி.மு.க., - எம்.எல்.ஏ.,வும், அக்கட்சியின் முன்னாள் அமைச்சருமான செந்தில் பாலாஜி மற்றும் அவரின் சகோதரர் அசோக்குமார் ஆகியோர் இருப்பது தெரிய வந்துள்ளது.

த.வெ.க., ஆட்சியை கவிழ்க்க, 180 கோடி ரூபாய்க்கு பேரம் பேசப்பட்ட தகவல், போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.இந்த வழக்கில் விசாரணைக்கு ஆஜராக கோரி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக் குமாருக்கு வரும் ஜூலை 6ம் தேதி விசாரணைக்கு திருவல்லிக்கேணி போலீஸ் ஸ்டேஷனில் ஆஜராக கோரி சம்மன் கொடுத்தனர்.

இந்த சம்மனை இன்று செந்தில் பாலாஜி வீட்டில் அவரது தந்தை வேலுச்சாமி இன்று வழங்கி இருக்கின்றனர்