“எங்க அப்பா இனி ஹெல்மெட் போடுவார்... பிளீஸ் ஒரு தடவை மட்டும் விட்டுங்க”- போலீசிடம் கெஞ்சிய குழந்தை

 
“எங்க அப்பா இனி ஹெல்மெட் போடுவார்... பிளீஸ் ஒரு தடவை மட்டும் விட்டுங்க”- போலீசிடம் கெஞ்சிய குழந்தை

நாகர்கோவிலில் “இனி ஹெல்மெட் போடுவார், பிளீஸ் ஒரு தடவை மட்டும் அப்பாவை விடுங்கள்” என போக்குவரத்து இன்ஸ்பெக்டரிடம் வேண்டுகோள் வைத்த குழந்தையின் புகைப்படம் இணையத்தில் வைரலாகிவருகிறது.

Image


நாகர்கோவில் அண்ணா பஸ் நிலையம் அருகே  போக்குவரத்து ஆய்வாளர் அருண் தலைமையில் போலீசார் வாகன சோதனை யில் ஈடுப்பட்டனர். அப்போது ஒரு ஸ்கூட்டரில் 2 பெண் குழந்தையுடன்  கணவன்- மனைவி என 4 பேர் வந்தனர். அவர்களை தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தினர். அப்போது காத்திருந்த சிறுமியில் ஒருவர் போக்குவரத்து ஆய்வாளரிடம், “சார் அங்க பாருங்க. நிறைய பேர் ஹெல்மெட் போடாம போறாங்க. எங்கள மட்டும் நிறுத்தி வச்சிருக்கீங்க. எங்க அப்பா பாவம் சார். விட்ருங்க” என மழலை மொழியில் பேசினாள். 

அப்போது ஆய்வாளர், “கீழே விழுந்தா என்னாகும். தலையில் அடிபட்டு ரத்தம் வரும். அதனால்தான் ஹெல் மெட் போட சொல்கிறோம்” என கூறி புரிய வைத்தார். அதற்கு சிறுமி, “மன்னிக்கவும் சார், இனி  எங்க அப்பாவை ஹெல்மெட் போட சொல்றேன். இந்த ஒரு தடவை மட்டும் விடுங்க சார்” என சொல்லிய சிறுமியை பார்த்து பேனா பென்சில் பரிசாக கொடுத்து சிறுமிக்கு கைகொடுத்து வாழ்த்தி அனுப்பி வைத்தார்.