காய்ச்சல் காரணமாக அனுமதிக்கப்பட்ட 2 வயது குழந்தை உயிரிழப்பு! ரேலா மருத்துவமனை மீது புகார்

 
காய்ச்சல் காரணமாக அனுமதிக்கப்பட்ட 2 வயது குழந்தை உயிரிழப்பு! ரேலா மருத்துவமனை மீது புகார்

குரோம்பேட்டை ரேலா மருத்துவமனையில் காய்ச்சல் காரணமாக அனுமதிக்கப்பட்ட 2 வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

42 நாள் குழந்தை உயிரிழப்பு! - Global Tamil News

சென்னை தாம்பரம் அடுத்த முடிச்சூர் பகுதியை சேர்ந்தவர்கள் செல்வகுமார், ஷாலினி இவர்களின் 2 வயது மகள் தேஜஸ்ரீ சில நாட்களுக்கு முன்னர் காய்சல் ஏற்பட்டுள்ளது, சேலையூர், பல்லாவரம் ஆகிய இரண்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மேல் சிகிச்சைகாக நள்ளிரவில் குரோம்பேட்டை ரேலா மருத்துவமனையில் அனுமதிகப்பட்டார். அப்போது 50 ஆயிரம் முன்பணம் கட்ட சென்னபோது 10 அயிரம் கட்டிய பெற்றோர் காலையில் கட்டுவதாக கூறியுள்ளனர். 

அதே நேரத்தில் 5 நாட்கள் தங்கினால் குணமாகும் என மருத்துவர்கள் உறுதி கூறியதாகவும் அதனால் பெற்றோர் பணம் இல்லாமல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்வதாக கூறியுள்ளனர். ஆனால் சிறிது நேரத்தில் குழந்தை உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்ததனர். மேலும் மருத்துவ மனை நிர்வாகம் இதுவரை ஒரு லட்சம் கட்டவேண்டும் கட்டிய பணம் 10 ஆயிரம் போக  மிதி 90 ஆயிரம் பணம் கட்ட கூறியுள்ளனர். இதனால் பெற்றோர் உறவினர்கள் மருத்துவமனை முன்பாக திரண்டு குழ்ந்தை தீடீரென உயிரிழந்தது எப்படி என கேள்வி எழுப்பி மருத்துவர்களை கேள்வி எழுப்பினார்கள்.

விபத்தில் இரண்டு வயது குழந்தை உயிரிழப்பு - Karudan News

தகவல் அறிந்த தாம்பரம் காவல் உதவி ஆணையாளர் சினிவாசன் தலைமையில் போலீசார் பெற்றோர் மருத்துவமனை நிர்வாகத்திடம் பேச்சுவார்த்தை செய்து கட்ட வேண்டிய 90 ஆயிரத்தை கட்ட வேண்டாம் என கூறிய நிலையில் குழந்தை தேஜஸ்ரீ உடலை பெற்றோர்களிடம் ஒப்படைத்தனர். இறந்த குழந்தைக்கு ரத்த தட்டணுக்கள் வெகுவாக குறைந்துள்ளதால் டெங்கு பாதிப்பால் குழந்தை உயிரிழந்துள்ளது தெரியவந்துள்ளது.