விதவை பெண்ணை கர்ப்பமாக்கி... குழந்தையை ரூ.1.50 லட்சத்துக்கு விற்ற கள்ளக்காதலன்

 
baby leg baby leg

மன்னார்குடி அருகே பிறந்த குழந்தையினை விற்பதற்காக விதவை பெண்ணை மனைவியாக்குவதாக ஆசை வார்த்தை கூறி கர்ப்பமடைய செய்த கள்ளக்காதலன் கைது செய்யப்பட்டார்.

Thanjavur Government Raja Mirasudar Hospital fire: தஞ்சாவூரில் அரசு ராசா  மிராசுதார் மருத்துவமனையில் தீ விபத்து! அலறியபடி வெளியேறிய கர்ப்பிணிகள்! |  Thanjavur Government ...

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியை அடுத்த துண்டக்கட்டளை கிராமத்தை சேர்ந்த நாகராஜன்-வாசுகி ஆகியோரது மகன் தினேஷ்க்கு திருமணமாகி ஒரு ஆண் குழந்தை உள்ளது. துண்டக்கட்டளை கிராமத்திற்கு அருகே உள்ள குணமடை கிராமத்தில் சந்தோஷ்குமாரி என்ற இளம் விதவை பெண் அவருக்கு ஏற்கனவே பிறந்த இரண்டு குழந்தைகளுடன் அவரது பெற்றோருடன் வசித்து வரும் நிலையில் தினேஷ் அவரிடம் ஆசை வார்த்தை கூறி அவரை காதலித்து வந்துள்ளார். தினேஷின் ஆசை வார்த்தையில் மயங்கி சந்தோஷ்குமாரி அவரிடம் இணக்கமாக பழகி வந்த நிலையில் கடந்த 10 மாதங்களுக்கு முன்பு கர்ப்பமாகியுள்ளார்.

இதனையடுத்து சந்தோஷ்குமாரிக்கு கடந்த வாரம் தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் அழகிய ஆண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. கள்ளக்காதலன் தினேஷ் தனக்கும் சந்தோஷ்குமாரிக்கும் பிறந்த ஆண் குழந்தையை விற்க முடிவு செய்துள்ளார். இதற்காக தனது அம்மா வாசுகியுடன் சேர்ந்து திட்டம் திட்டியுள்ளான். இதற்காக அப்பகுதியில் உள்ள புரோக்கரிடம் தகவல் தெரிவித்த நிலையில் குழந்தைக்காக விலை ரூ.1.50 லட்சம் நிர்ணயிக்கப்பட்டது. இதனை அடுத்து சந்தோஷ்குமாரியின் மனதை திருடிய தினேஷ், தற்போது அவரது குழந்தையை திருடி மன்னார்குடி அருகே உள்ள ஆதிச்சபுரம் பகுதியை சேர்ந்த 15 ஆண்டுகளாக குழந்தை இல்லாத ராதாகிருஷ்ணன் , விமலா தம்பதியிடம் விற்பனை செய்துள்ளார்.

இதுகுறித்து தகவல் அறிந்த சந்தோஷ்குமாரி மன்னார்குடி காவல்துறையிடம் புகார் தெரிவித்ததன் பேரில் மன்னார்குடி காவல்துறை வழக்கு பதிவு செய்து குழந்தையை விற்ற கள்ளக்காதலன் தினேஷ் அவருக்கு உடைந்தையாக இருந்த அவரது தாய் வாசுகி மற்றும் குழந்தையை விலைக்கு வாங்கிய தம்பதியினர் மற்றும் தரகர் வினோத் உள்ளிட்ட 5 பேரை காவல்துறை கைது செய்ததோடு, குழந்தையை மீட்டுள்ளனர். விதவை பெண்ணின் மனதை திருடி கர்பமாக்கிய கள்ளக்காதலன் குழந்தை பிறந்தவுடன் அதனை திருடி விற்ற போது மன்னார்குடி காவல்துறையினர் கைது செய்த சம்பவம் பெரும் பரப்பை ஏற்படுத்தியுள்ளது.