சபரிமலை மகரஜோதி- சன்னிதானம் பகுதியில் குவிந்த ஐயப்ப பக்தர்கள்

 
சபரிமலை

சபரிமலையில் ஜோதி தரிசனம் காண சன்னிதானம் பகுதியில் ஐயப்ப பக்தர்கள் குவிந்துள்ளனர்.

Image

கடந்த மூன்று நாட்களாக சபரிமலைக்கு வந்த பக்தர்கள் ஜோதி தரிசனத்திற்காக திருவதாங்கூர் தேவசம்போர்டு ஒதுக்கி இருக்கக்கூடிய 10 இடங்களில் காத்திருக்கிறார்கள். இன்று மகர சங்கரமம் அதிகாலை 2 மணி 5 நிமிடங்களில் துவங்கியது அந்த நேரத்தில் சபரிமலை திரு நடையும் திறக்கப்பட்டது. 2 மணி 46 மணிக்கு மூலஸ்தானத்தில் மகர சங்கரம பூஜை நடைபெற்றது. பந்தளம் அரண்மனையில் இருந்து கொண்டுவரப்பட்ட நெய் அபிஷேகம் நடைபெற்றது

பந்தளம் அரண்மனையில் இருந்து 13-ஆம் தேதி காலை தங்க ஆபரண பெட்டி ஆனது எடுத்துவரப்பட்டது. இன்று காலை நிலக்கல் வந்த தங்க ஆபரண பெட்டி சுமார் 5 மணி அளவில் சபரிமலை மரக்கூட்டம் பகுதிக்கு கொண்டுவரப்பட உள்ளது. அங்கிருந்து தேவசம்போர்டு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படும். 18ம் படிக்கு ஆறு முப்பது மணிக்கு தங்க ஆபரண பெட்டியானது, மேல் சாந்தி மற்றும் தந்திரி பெற்றுக் கொண்டு திரு நடையில், உள்ள ஐயப்பனுக்கு அணிவிக்கப்படும். இதைத்தொடர்ந்து ஆறு மணி முதல் 6 45 மணிக்குள் பொன்னம்பலம் மேட்டில் மகர ஜோதி தரிசனம் நடைபெறும்.