ஏரி, குளங்களை தூர்த்து விடக்கூடாது- அய்யாக்கண்ணு

 
ayyakannu

ஏரி குளங்களை தூர்த்து விடக்கூடாது, நீர்நிலைகளை ஆக்கிரமிக்க கூடாது, மரங்களை வெட்டக்கூடாது, நீர்நிலைகள் காக்க  வேண்டும் என விவசாய சங்க தலைவர் அய்யாக்கண்ணு தெரிவித்துள்ளார்.

Who is P. Ayyakannu? | Mint

திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் அடுத்த சேகரை கிராமத்தில்  வாழும் ஏழை எளிய தாழ்த்தப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்திற்கு ஆதாரமாக இருப்பது நீர்நிலைகள் மட்டுமே.  நீர்நிலைகளில் தண்ணீர் தேக்கம் இன்றி பாயவும், தண்ணீர் வடியும் தடையா இருப்பது ஆக்கிரமிப்புகள்.  இத்தகைய நீர்நிலை ஆக்கிரமிப்பாளர்களுக்கு அதிகாரிகள் உடந்தையாக இருந்து வருவதால் சேகரை கிராம மக்கள் பல்வேறு நிலைகளில் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். இதனை வலியுறுத்தி சேகரை கிராமத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெறுவதாக இருந்தது. இந்த ஆர்ப்பாட்டத்தில் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் நிறுவன தலைவர் அய்யாக்கண்ணு கலந்து கொள்வதாக இருந்த நிலையில் ஆர்ப்பாட்டம் தற்காலிகமாக  ஒத்தி வைக்கப்பட்டது.

சேகரை கிராமத்திற்கு வந்த அய்யாக்கண்ணு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், “ ஏரி, குளங்களை தூர்த்து விடக்கூடாது. நீர்நிலைகளை ஆக்கிரமிக்க கூடாது என உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றமும் சொல்லியிருக்கிறது . தற்போது  தலைநகர் டெல்லியில்  காற்று மாசு படிந்து வாகனம் கூட  ஓட்ட முடியாத ஒரு சூழ்நிலை எப்படி இருக்கிறது.   அதேபோல் கிராமத்தில் மாசுபடக் கூடாது, மரங்களை வெட்டக்கூடாது, நீர்நிலைகள் காக்கப்பட வேண்டும் . தற்போது சேகரை கிராமத்தில் உள்ள விவசாயிகள் அந்தப்பகுதியில் வேலை செய்ய முடியாமல் வெளியூர்களுக்கு வேலை தேடி செல்கின்றார்கள்.  கிராமத்தில் உள்ள விவசாயிகள்  முழுமையும் விவசாயத்தை மட்டுமே நம்பி உள்ளனர். விளைநிலத்தை அழிக்கும் போக்கினை யாராக இருந்தாலும் அதனை கைவிட வேண்டும். இல்லையெனில் பொங்கல்  பண்டிகை முடிந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு  மிகப்பெரிய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவோம்” என தெரிவித்தார்.