"மாற்றுச் சிந்தனை மரபை முன்னெடுத்த அயோத்திதாசரின் புகழ் வாழ்க" - முதல்வர் ஸ்டாலின் ட்வீட்

 
stalin stalin

மாற்றுச் சிந்தனை மரபை முன்னெடுத்த அயோத்திதாசரின் புகழ் வாழ்க என்று முதல்வர் ஸ்டாலின் ட்வீட் செய்துள்ளார். 

tn

தமிழன்,  திராவிடன் என்னும் இரு சொற்களை அரசியல் களத்தில் அடையாளங்களாக மாற்றியவர் அயோத்திதாச பண்டிதர்.  1893 ஆம் ஆண்டு இவர் திராவிட மகாஜன சபை என்பதை நிறுவினார். அத்துடன் ஒரு பைசா தமிழன் என்ற இதழைத் தொடங்கி அதையே தமிழன் என்ற இதழாக 1907 ஆம் ஆண்டு நடத்திவந்தார்.  எழுத்தாளர், ஆய்வாளர் ,வரலாற்று ஆசிரியர் ,மானுடவியல் சிந்தனையாளர், பதிப்பாளர், பத்திரிக்கையாளர் ,மருத்துவர், பேச்சாளர், மொழியியல் வல்லுனர், பன்மொழிப்புலவர் ,புதிய கோட்பாட்டாளர் ,சிறந்த செயல்பாட்டாளர் ,சளைக்காத போராளி என பன்முக ஆற்றல் கொண்ட இவர் பூர்வீக சாதி பேதமற்றவர்கள் திராவிடர்கள் என்று உரக்க கூறினார். 


இந்நிலையில் முதல்வர் ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், "திராவிடன், தமிழன் ஆகிய சொற்களை அரசியல் தளத்தில் அடையாளச் சொற்களாகப் பயன்படுத்திய முன்னோடியும் தமிழ்ச் சிந்தனை மரபின் தவிர்க்க முடியாத ஆளுமையுமாகிய பண்டிதர் அயோத்திதாசர் அவர்களின் பிறந்தநாள்!

அந்நியப் பொருட்களைப் புறக்கணிப்பதைவிடச் சாதிப் பெருமையைப் புறக்கணிப்பதுதான் முதன்மையானது என அவர் அன்றே முழங்கியது இன்றும் எண்ணிப் பார்க்கத்தக்கது. பண்டிதரின் கருத்துகளை ஊன்றிப் படிப்போம், அவரது பல்துறைப் பங்களிப்புகளை நமது அரசு அமைத்து வரும் நினைவு மண்டபம் உள்ளிட்ட முயற்சிகளின் வழியே அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் சொல்வோம்!

அறிவுத்தளத்திலும் அரசியல் தளத்திலும் மிகப்பெரும் மாற்றுச் சிந்தனை மரபை முன்னெடுத்த அயோத்திதாசரின் புகழ் வாழ்க! " என்று பதிவிட்டுள்ளார்.