மாணவர்களுக்கு விருது வழங்கும் விழா - விஜய் வருகை

 
vijay

தமிழக வெற்றிக் கழகம் சார்பில், நடிகர் விஜய் இன்று இரண்டாம் கட்ட கல்வி விருது வழங்குகிறார்.

vijay

சென்னை திருவான்மியூரில் நிகழ்ச்சி நடைபெறும் மண்டபத்திற்கு அதிகாலையே விஜய் வருகை புரிந்துள்ளார்.  19 மாவட்ட மாணவர்களுக்கு விருது வழங்குகிறார் விஜய்.725 மாணவர்கள் உட்பட 3,500 பேர் பங்கேற்பார்கள் என தகவல் வெளியாகியுள்ளது. த.வெ.க. நிர்வாகிகள் மாணவர்கள், பெற்றோரை பேருந்துகள் மூலம் அழைத்து வந்துள்ளனர். 

vijay

தொகுதி வாரியாக 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளில் முதல் மூன்று மதிப்பெண் பெற்ற மாணவ மாணவிகளுக்கு பாராட்டு விழா இன்று   நடைபெறுகிறது. மேலும் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட  மீதமுள்ள மாவட்டங்களை சேர்ந்த மாணவர்களுக்கு கல்வி விருதுகள் விழா நடைபெறுகிறது.