"இந்தியாவுக்காக பேச வேண்டிய காலத்தின் கட்டாயத்தில் உள்ளோம்" - முதல்வர் ஸ்டாலின்

 
MK Stalin

தெற்கிலிருந்து வரும் இந்த குரலுக்காக காத்திருங்கள் என்று ஆடியோ சீரிஸ் மூலம் மக்களிடம் உரையாட போவதாக முதல்வர் மு க ஸ்டாலின் வீடியோ வெளியிட்டுள்ளார்.

tn

28 கட்சிகள் கலந்து கொள்ளும் இந்தியா கூட்டணியின் மூன்றாவது ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க இன்று காலை மும்பை புறப்பட்டு செல்கிறார் முதல்வர் மு.க. ஸ்டாலின். இன்று மாலை நடைபெறும் கூட்டத்தில் பங்கேற்ற பின் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே அளிக்கும் விருந்தில் பங்கேற்கிறார். நாளை நடைபெறும் கூட்டத்திலும் பங்கேற்ற பின் மும்பையில் இருந்த புறப்பட்டு இரவு சென்னை திரும்புகிறார்.இந்நிலையில் ஸ்பீக்கிங் ஃபார் இந்தியா என்ற தலைப்பில் முதல்வரின் ஆடியோ சீரீஸ் நாளை முதல் வெளியாகியுள்ளது.  2024 இல் முடியப் போகும் பாஜக ஆட்சி இந்தியாவை எப்படி எல்லாம் ஒரு குலைத்தார்கள்? எதிர்காலத்தில் நாம் கட்டமைக்க விரும்பும் இந்தியா எப்படி இருக்க வேண்டும் என ஆடியோ வடிவில் பேசப்போகிறேன் என்று முதல்வர்  மு க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.  இந்தியாவுக்காக பேச வேண்டிய காலத்தின் கட்டாயத்தில் உள்ளோம்;  நாம் கட்டமைக்க விரும்பும் சமத்துவ சகோதரத்துவ இந்தியா குறித்து பேச போகிறேன்;  தெற்கிலிருந்து வரும் இந்த குரலுக்காக காத்திருங்கள் என்று அவர் கூறியுள்ளது தற்போது இணையத்தில் பேசும் பொருளாக மாறி உள்ளது.