தெற்கிலிருந்து வரும் இந்த குரலுக்காக காத்திருங்கள் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

 
stalin

I.N.D.I.A. கூட்டணி கட்சிகள் 3 ஆலோசனை கூட்டம் இன்று தொடங்க உள்ள நிலையில், X தளத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பதிவு வைரலாகியுள்ளது.

tn28 கட்சிகள் கலந்து கொள்ளும் இந்தியா கூட்டணியின் மூன்றாவது ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க இன்று காலை மும்பை புறப்பட்டு செல்கிறார் முதல்வர் மு.க. ஸ்டாலின். இன்று மாலை நடைபெறும் கூட்டத்தில் பங்கேற்ற பின் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே அளிக்கும் விருந்தில் பங்கேற்கிறார். நாளை நடைபெறும் கூட்டத்திலும் பங்கேற்ற பின் மும்பையில் இருந்த புறப்பட்டு இரவு சென்னை திரும்புகிறார்.இந்நிலையில் I.N.D.I.A. கூட்டணி கட்சிகள் 3 ஆலோசனை கூட்டம் இன்று தொடங்க உள்ள நிலையில், X தளத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தெற்கிலிருந்து வரும் இந்த குரலுக்காக காத்திருங்கள் என்று பதிவிட்டுள்ளார்.