தவறான பழக்கவழக்கங்கள் கூடாது - விஜய் அட்வைஸ்

 
gg

போதை பொருள் பயன்படுத்த கூடாது என்று மீண்டும் மீண்டும் சொல்ல வைத்து மாணவர்களை உறுதிமொழி எடுக்க வைத்தார்  த.வெ.க தலைவர் விஜய்.

ff

தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் முதல் கட்டமாக இன்று 21 மாவட்ட சேர்ந்த மாணவர்களுக்கு விருது வழங்கப்படுகிறது இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வந்த நிலையில் விழா மேடைக்கு வருகை புரிந்த நடிகரும் தமிழக வெற்றிக்  கழகத்தின் தலைவருமான விஜய்க்கு பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.  

fff

இதையடுத்து மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் பேசிய  விஜய்,  அரசியலில் மட்டுமல்ல எல்லாத் துறைகளிலும் நல்ல தலைவர்கள் தேவைப்படுகிறார்கள்.  நன்றாக படித்தவர்கள் அரசியலுக்கு வர வேண்டும் என்றார்.   தமிழகத்தில் போதை பொருட்கள் பயன்பாடு இளைஞர்கள் மத்தியில் அதிகமாகிவிட்டது. ஒரு பெற்றோர் என்ற முறையிலும்,  அரசியல் கட்சித் தலைவர் என்ற முறையிலும் எனக்கு அச்சமாக உள்ளது. தவறான பழக்கவழக்கங்களில் ஈடுபடாதீர்கள்.  ஈடுபடக் கூடாது.  உங்களுடைய அடையாளத்தை எக்காரணம் கொண்டும் இழந்து விடாதீர்கள் என்று தெரிவித்த அவர் , கல்வி விருது வழங்கும் மேடையில் போதைப்பொருள் பயன்படுத்தக் கூடாது என்று மீண்டும் மீண்டும் சொல்ல வைத்து  விஜய் உறுதிமொழி எடுக்க வைத்தார்.