தீவிரமாக நடைபெற்று வந்த அவனியாபுரம் ஜல்லிக்கட்டு ஏற்பாடுகள் : மாவட்ட நிர்வாகம் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு...

 
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு


மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டிக்காக வாடிவாசல் அமைக்கும்  பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.  இந்நிலையில் ஜல்லிக்கட்டு  முன்னேற்பாடுகளை  நிறுத்த திடீரென மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியதால்  பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் தாலுகா, அவனியாபுரத்தில் ஆண்டுதோறும் பொங்கல் தைத் திருநாளான ஜன.14 அன்று ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுவது வழக்கம்.  தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டி காண பல்லாயிரக்கணக்கான மக்கள் வருவர்..   அதன்படி இந்த ஆண்டு அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு  நடைபெறுவதற்கான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் செய்துவருகிறது.மேற்கொண்டது.

மதுரை ஜல்லிக்கட்டு போட்டியில் சீறிப்பாய ஆயத்தமாகும் காளைகள் !

இதற்காக அவனியாபுரம் திருப்பரங்குன்றம் சாலையில், வாடிவாசல் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்தது. வடி வாசலுக்கு  தென்னை தூண்களும், காளைகள் வரிசையாக  நின்று வர  சவுக்கு கம்புகளும்,  பார்வையாளர்கள் நின்று பார்க்க தடுப்புகள் அமைக்கும் பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.  அதேநேரம் நாளை ஜல்லிக்கட்டு போட்டியில் பங்குபெறும் மாடுபிடி வீரர்களுக்கு   மருத்துவப் பரிசோதனை நடைபெற உள்ளன.   

ஜல்லிக்கட்டு

இந்நிலையில் இன்று ஜல்லிக்கட்டு போட்டிக்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்த நிலையில், முன்னேற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் தடுத்து நிறுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக புதிய ஊரடங்கு கட்டுப்பாடுகளை  தமிழக அரசு விதித்தது.  இதனால் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுமா என்ற கேள்வியெழுந்தது. அதே நேரம் கொரோனா பரவல் காரணமாக  இந்த ஆண்டு பார்வையாளர்கள் இன்றி ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்படும் என்று கூறப்பட்டது. ஆனால் தற்போது மாவட்ட நிர்வாகம் ஜல்லிக்கட்டு போட்டிக்கான பணிகளை  நிறுத்தியிருப்பதால்,  மீண்டும் போட்டியாளர்களிடையே குழப்பங்கள் ஏற்பட்டுள்ளது. இன்று மாலைக்குள் ஜல்லிக்கட்டு குறித்த புதிய அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.