மதுரை அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு தொடங்கியது!!

 
ttn

பொங்கல் திருநாளை முன்னிட்டு மதுரை அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு தொடங்கியது.

jalli

பொங்கல் திருநாளை ஒட்டி மதுரை அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது.  காலையில் தொடங்கி ஜல்லிக்கட்டு போட்டி மாலை 4 மணி வரை நடைபெறுகிறது. ஒரு மணி நேரத்திற்கு ஒரு சுற்றாக காலை 8 மணி முதல் மாலை  4மணி வரை ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்படுகிறது.  ஜல்லிக்கட்டு போட்டியில் 700 காளைகள்,  300 காளையர்கள் பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.  கொரோனா காரணமாக  150 பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. முதல் மாட்டினை அமைச்சர் மூர்த்தி மற்றும் பழனிவேல் தியாகராஜன் கொடி அசைத்து அனுப்பிவைத்தனர்.

jalli
அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் சீறிப் பாயும் காளைகளை அடக்கி பரிசுகளை வெல்ல காளையர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். முதல்வர் சார்பில் சிறந்த காளைக்குக் காரும், சிறந்த மாடுபிடி வீரர் இருசக்கர வாகனமும் பரிசாக அறிவிக்கப்பட்டுள்ளது. தங்க காசுகள் ,மிக்ஸி ,கிரைண்டர் ,கட்டில் ,சைக்கிள் உள்ளிட்ட பல்வேறு பரிசுகள் வழங்கப்படுகிறது. அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் காளைகளுக்கும், காளையர்களும் மருத்துவ பரிசோதனை செய்த பிறகே  அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.ஜல்லிக்கட்டு போட்டியை காண உள்ளூர் மக்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அவனியாபுரம் ஜல்லிக்கட்டு பாதுகாப்பு பணியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மருத்துவ பொருட்களும் , அவசர ஊர்திகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.