ஏடிஎம் மூலம் ரேஷன் அரிசியை பெறும் தானியங்கி திட்டம் அறிமுகம்!
Aug 13, 2026, 06:20 IST1786582208000
அன்னபூர்த்தி கிரெயின் ஏடிஎம் என்று பெயரிடப்பட்டு உள்ள இந்த திட்டம், சத்தீஸ்கர் தலைநகர் ராய்பூரில் உள்ள பிரகான் பகுதியில் தொடங்கப்பட்டு உள்ளது. பயனாளிகள் தங்களுக்கான மாதாந்திர ரேஷன் அரிசியை 24 மணி நேரமும் பெற்றுக் கொள்ளலாம்.ரேஷன் அட்டை விவரங்களை உள்ளீடு செய்து கைரேகையை பதிவு செய்ய வேண்டும்.
அதன் பின்னர் அவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ள அரிசி அங்கு நிறுவப்பட்டு உள்ள இயந்திரத்தின் மூலம் வெளியே வரும். இந்த இயந்திரத்தில் 2,500 கிலோ அரிசியை சேமித்து வைக்கலாம்.இந்த புதிய திட்டமான கிரெயின் ஏடிஎம், உள்ளூரில் உள்ள மகளிர் சுய உதவிக் குழுவான ஜோதி குழுவால் இயக்கப்படுகிறது.

