அதிமுகவின் ஃபர்ஸ்ட் சாய்ஸ் விஜய் தான்! 90 சீட், துணை முதல்வர் பதவி பேரம்- ஆடிட்டர் குருமூர்த்தி பரபரப்பு தகவல்

தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடக்கவுள்ள நிலையில், அரசியல் களம் இப்போதே களை கட்ட தொடங்கியுள்ளது. முதற்கட்டமாக கடந்த 2023-ஆம் ஆண்டு பிரிந்த அதிமுக- பாஜக கூட்டணி தற்போது மீண்டும் ஒன்றிணைந்துள்ளது. அதிமுகவும் பாஜகவும் இணைந்து, அதிமுகவின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் வருகின்ற 2026-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள இருப்பதாக உள்துறை அமைச்சர் அமித்ஷா அறிவித்தார். அதேசமயம் எடப்பாடி பழனிசாமி, தமிழ்நாட்டின் உரிமைகளை அ.தி.மு.க ஒருபோதும் விட்டுக் கொடுக்காது எனவும் 2026 தேர்தலில் அ.தி.மு.க தலைமையிலான கூட்டணி வெற்றி பெறும் எனவும் அறிக்கை வெளியிட்டிருந்தார்.
இந்நிலையில் தனியார் நிகழ்ச்சியில் பேசிய ஆடிட்டர் குருமூர்த்தி, “அண்ணாமலைக்கு தமிழ்நாட்டில் மட்டும் அல்ல, எந்த மாநில தலைவருக்கும் இப்படி இல்லை. அகில இந்திய அளவில் மகத்தான செல்வாக்கு இருக்கிறது. பாஜகவில் அண்ணாமலையின் ரோல் குறையாடு. அண்ணாமலை அவர்களுக்கு மிகப்பெரிய பதவி காத்திருக்கிறது. சீமான் தீர்க்கமான முடிவெடுத்தால் பிற்காலம் பிரகாசமாக இருக்கும். தமிழகத்தில் முதல்முறையாக தமிழகம் பெரியார் மண் அல்ல. பெரியார் என்பவரே மண் என பகிரங்கமாக சொன்ன சீமானை முழுமனதோடு பாராட்டுகிறேன்.
அதிமுகவின் ஃபர்ஸ்ட் சாய்ஸ் விஜய் தான். ஆனால் பேச்சுவார்த்தை வெற்றி பெறாத நிலையில்தான், அதிமுக பாஜக உடன் கூட்டணி அமைத்திருப்பதாக தோன்றுகிறது. 90 சீட், விஜய்க்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருந்தால் எடப்பாடியின் அதிகாரத்திற்கே பங்கம் வந்திருக்கும்” என்றார்.