திமுக மற்றும் கூட்டணி கட்சிகளை சீண்டிய ஆடிட்டர் குருமூர்த்தி...தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு!

 
மு.க.ஸ்டாலின் மிசா கைதி தான்! துக்ளக் குருமூர்த்தி!

திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளை பற்றி ஆடிட்டர் குருமூர்த்தி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 
துக்ளக் பத்திரிக்கையின் ஆசிரியரான ஆடிட்டர் குருமூர்த்தி அவ்வபோது சர்ச்சை கருத்துகளை வெளியிட்டு தமிழக அரசியலில் பெரு பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார். இந்த நிலையில், திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்டு போன்ற கட்சிகளை பற்றி பெரியார் கூறியதை, அண்ணாமலை கூறியது போல அந்தந்த கட்சிகளின் தலைமை அலுவலகத்தில் வைத்தால் எப்படி இருக்கும் என பத்திரிக்கையாளர் ஒருவர் தனது வாட்ஸ் அப் எண்ணுக்கு 3 புகைப்படங்களை அனுப்பியுள்ளதாக கூறி சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை போட்டுள்ளார். 


ஆடிட்டர் குருமூர்த்தி தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ஈவேரா திமுக பற்றி கூறியதை அண்ணாமலை கூறியது போல திமுக அலுவலகத்தில் பொறித்தால் எப்படி இருக்கும் என்று துக்ளக் பத்திரிகையாளர் ஒருவர் எனக்கு அனுப்பிய வாட்ஸ்அப்.


ஈவேரா காங்கிரஸ் பற்றி கூறியதை அண்ணாமலை கூறியது போல சத்தியமூர்த்தி பவனில் பொறித்தால் எப்படி இருக்கும் என்று துக்ளக் பத்திரிகையாளர் ஒருவர் எனக்கு அனுப்பிய வாட்ஸ்அப்


ஈவேரா கம்யூனிஸ்டு பற்றி கூறியதை அண்ணாமலை கூறியது போல கம்யூனிஸ்டு அலுவலகத்தில் பொறித்தால் எப்படி இருக்கும் என்று துக்ளக் பத்திரிகையாளர் ஒருவர் எனக்கு அனுப்பிய வாட்ஸ்அப். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இந்த பதிவு திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சிகளை பெறும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளதோடு, ஆத்திரத்தையும் ஏற்படுத்தியுள்ளது.