ரயில் பயணிகள் கவனத்திற்கு..! ஜூலை முதல் பேன்ட்ரிகார் பெட்டிகளில் உணவு தயாரிக்கப்படாது..!

 

இந்திய ரயில்வே வாரியம் ரயில் பெட்டிகளில் பயணிகளின் வசதிக்காக பான்ட்ரி உணவு பெட்டியை நடத்தி வருகிறது. இதில் உணவு வகைகள் தயாரிக்கப்பட்டு பயணிக்கும் பயணிகளுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில், ரயில் பயணிகளுக்கான உணவு விற்பனையில் இந்திய ரயில்வே வாரியம் புதிய முறையை அறிமுகம் செய்ய உள்ளது. புதிய விதிமுறைகளின் படி ரயில்களில் உள்ள பான்ட்ரிகார் பெட்டிகளில் இனி பயணிகளுக்கான உணவு தயாரிக்கப்படாது. இவற்றில் தேவை இருப்பின் மட்டும் சுடுநீர் அல்லது தேநீர் தயாரிக்க முடியும். ரயில் நிலையங்களில் உள்ள சமையல் அறைகளும் மூடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.ரயில்வே வாரியத்தின் இந்த உத்தரவை வருகிற ஜூலை மாதம் முதல் ரயில்களில் சமையல் முறை முற்றிலும் மாற்றப்படும் என்று கூறப்படுகிறது.

புதிய முறையின் கீழ் எந்தவொரு வழித்தடத்தின் ரயில்களிலும் தரமான உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. சமையல் வேலைகளை நிர்வகிக்கும் பொறுப்பு பல்வேறு ஏஜென்சிகளுக்கு வழங்கப்படும். ஒரே வழித்தடத்தில் ஐந்து முதல் ஏழு ரயில்களுக்கு அந்தந்த ஏஜென்சிகள் பொறுப்பாக இருக்கும். சம்பந்தப்பட்ட ஏஜென்சி ரயில் நிலையத்தில் அடிப்படை சமையலறையைத் தொடங்கும். பின்னர் அங்கிருந்து ரயில்களுக்கு உணவு மற்றும் தின்பண்டங்கள் தயாரிக்கப்பட்டு வழங்கப்படும்.வடகிழக்கு ரயில்வே 80 பேண்ட்ரி கார்களை ஒரு கிளஸ்டராக பராமரிக்கும் சேவையைத் தொடங்கியுள்ளது. இதற்காக குறிப்பிட்ட தேதி வரை பல்வேறு நிறுவனங்களிடமிருந்து டெண்டர்கள் கேட்கப்பட்டுள்ளன. அனுபவத்தின் அடிப்படையில் மட்டுமே சமையக் பொறுப்பு ஏஜென்சிகளிடம் ஒப்படைக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.