யுபிஐ பயனர்கள் கவனத்திற்கு..! நவம்பர் 3ஆம் தேதி முதல் முக்கிய மாற்றம்..!
நவம்பர் 3ஆம் தேதி முதல் புதிய யுபிஐ விதிகளை அமலுக்கு கொண்டுவர இருக்கிறது.கூகுள் பே, போன்பே, பேடிஎம் போன்ற ஆப்களில் இருந்து பரிவர்த்தனை செய்வதற்கு ஒரு நாளுக்கு 10 சைக்கிள் என்று நேரம் பிரிக்கப்பட்டு இருக்கிறது. இதில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இப்போது, யுபிஐ பரிவர்த்தனைகள் தினமும் பத்து செட்டில்மெண்ட் சுழற்சிகளில் (Settlement cycles) செயல்படுத்தப்படுகின்றன. இந்த சுழற்சிகள் இரு வகைப்படி பிரிக்கப்படுகின்றன:
அங்கீகரிக்கப்பட்ட பரிவர்த்தனைகள்: இது எளிதாக, நாம் ஒரு நபருக்கு பணம் அனுப்புவதோ அல்லது பெறுவதோ போன்ற பரிவர்த்தனைகளை குறிக்கின்றது.
சர்ச்சைக்குரிய பரிவர்த்தனைகள்: இது பண பரிவர்த்தனைச் செயல்பாட்டில் சிக்கல்கள் ஏற்பட்டு, பரிவர்த்தனை முடிவடையாமல் நிறுத்தப்பட்டிருக்கின்றது. உதாரணமாக, பணம் ஏற்கனவே அனுப்பியவுடன், அது பாதியிலேயே நிறுத்தப்பட்டாலோ அல்லது மீண்டும் திரும்பி வந்தாலோ, அது டிஸ்பியூட் பரிவர்த்தனை எனப்படும்.
நவம்பர் மூன்றாம் தேதியில் இருந்து என்பிசிஐ ஒரு முக்கிய மாற்றத்தை நடைமுறைக்கு கொண்டு வருகிறது. இதன்படி அங்கீகரிக்க மற்றும் சர்ச்சைக்குரிய பரிவர்த்தனைகள் இனி தனித்தனியாக பிரித்து தனிப்பட்ட சுழற்சிகளில் கையாளப்படும் என தெரிவித்திருக்கிறது . நவம்பர் 3 முதல் நடைமுறைக்கு வரக்கூடிய இந்த புதிய விதிமுறைகளின் படி அங்கீகரிக்கப்பட்ட பரிவர்த்தனைகள் மட்டுமே தினமும் நடைபெறக்கூடிய வழக்கமான பத்து சுழற்சிகளில் கையாளப்படும் .
அதே நேரத்தில் இந்த சர்ச்சைக்குரிய பரிவர்த்தனைகளுக்காக பிரத்தியேகமாக டிசி1 மற்றும் டிசி 2 என இரண்டு புதிய சுழற்சிகள் அறிமுகப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அதாவது காலை 9 மணியிலிருந்து இரவு 9 மணி வரையிலான 10 சுழற்சிகளில் அங்கீகரிக்கப்பட்ட பரிவர்த்தனைகள் மட்டுமே கையாளப்படும் என்றும் நள்ளிரவு முதல் மாலை 4 மணி வரை மற்றும் மாலை 4 மணி முதல் நள்ளிரவு வரை என இரண்டு சுழற்சிகள் சர்ச்சைக்குரிய பரிவர்த்தனைகளுக்கு என மாற்றப்படுகின்றன .
இப்படி அங்கீகரிக்கப்பட்ட பரிவர்த்தனைகளுக்கு தனி சுழற்சிகள் கொண்டுவரப்படுவதால் நம் யுபிஐ பண பரிவர்த்தனை மேலும் விரைவானதாக மாறும். அது தவிர பரிவர்த்தனையில் ஏற்படும் சிக்கல்கள் தனி சுழற்சிகளில் கையாள ப்படுவதால் பிரச்சினைகளும் விரைவாக தீர்க்கப்படும் என சொல்லப்படுகிறது.


