ஈரோடு இளைஞர்கள் கவனத்திற்கு..! ஊராட்சி ஒன்றியத்தில் அலுவலக உதவியாளர் வேலை..! தேர்வு கிடையாது..!
| நிறுவனம் | தமிழ்நாடு அரசு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை (TNRD) |
| வகை | தமிழ்நாடு அரசு வேலை |
| காலியிடங்கள் | 04 |
| பணியிடம் | ஈரோடு, தமிழ்நாடு |
| ஆரம்ப தேதி | 04.02.2026 |
| கடைசி தேதி | 10.02.2026 |
ஈரோடு மாவட்டம், ஊராட்சி ஒன்றியத்தில் காலியாக உள்ள கீழ்காணும் பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
பதவி: அலுவலக உதவியாளர்
சம்பளம்: மாதம் Rs.15,700 – 58,100/-
காலியிடங்கள்: 04
கல்வி தகுதி: 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். சைக்கிள் ஓட்ட தெரிந்திருக்க வேண்டும்
வயது வரம்பு:
பொதுப்பிரிவு (OC) – 18 – 32 வயதுக்கு மிகாமல்
BC/MBC & DC பிரிவு – 18 – 34 வயதுக்கு மிகாமல்
SC/ST பிரிவு – 18 – 37 வயதுக்கு மிகாமல்
தேர்வு செய்யும் முறை: தகுதியான நபர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
முக்கிய தேதிகள்:
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 04.02.2026
விண்ணப்பிக்க கடைசி தேதி: 10.02.2026
விண்ணப்பிக்கும் முறை?
Step 1: https://erode.nic.in/ இணையதளத்திற்கு சென்று விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்யவும். (அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள நேரடி லிங்க் மூலம் பதிவிறக்கம் செய்யலாம்)
Step 2: பதிவிறக்கம் செய்த விண்ணப்பப் படிவத்தை பிரிண்ட் அவுட் எடுத்து, கேட்கப்பட்ட அனைத்து விவரங்களையும் தெளிவாகவும் சரியாகவும் பூர்த்தி செய்யவும்.
Step 3: பின்னர் தேவையான கல்வி சான்றிதழ்களை இணைத்து அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பவும்.
Step 4: சுய முகவாரியுடன் கூடிய அஞ்சல் வில்லை Rs.55/- ஒட்டப்பட்ட அஞ்சல் உறை -1 (10 x 4 Inches Postal Cover) இணைத்து அனுப்பப்பட வேண்டும்.


