ரயில் பயணிகள் கவனத்திற்கு..! ஏப்ரல் 15 வரை எழும்பூர் ரூட்டில் சேவை மாற்றம்…!

 
train

எழும்பூர் நிலையத்தின் 10 மற்றும் 11-ஆவது நடைமேடைகளில், ஏப்ரல் 8 முதல் 15 வரை தினமும் இரவு 11 மணி முதல் அதிகாலை 5 மணி வரை பணிகள் நடைபெறும். இதனால், அந்த வழித்தடத்தில் இயங்கும் ரயில்களின் இயக்கத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதன்படி, சென்னை கடற்கரையிலிருந்து இரவு 11.05, 11.30, 11.59 மணிக்கு தாம்பரம் செல்லும் ரயில்கள் முழுமையாக ரத்து செய்யப்படுகின்றன. மேலும், காலை 5.50 மணிக்கான சேவையும் குறிப்பிட்ட நாட்களில் இயங்காது.

ஏப்ரல் 12 அன்று கூடுதல் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. அந்த நாளில் அதிகாலை 4.15 மற்றும் இரவு 11 மணிக்குப் பிறகு சில ரயில்கள் ரத்து செய்யப்படுகின்றன. தாம்பரத்திலிருந்து கடற்கரை நோக்கி செல்லும் சில சேவைகளும் பாதிக்கப்படும்.

அதே நேரத்தில், சில ரயில்கள் தாம்பரம் வரை மட்டுமே இயக்கப்படும். இதனால் பயணிகள் முன்கூட்டியே திட்டமிட்டு மாற்று போக்குவரத்தை பயன்படுத்துமாறு ரயில்வே நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.