பயணிகள் கவனத்திற்கு..! சென்னை - பெங்களூரு எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையில் மாற்றம்..!!
பராமரிப்பு பணி காரணமாக சென்னை சென்டிரல்-பெங்களூரு இடையே எக்ஸ்பிரஸ் ரெயில்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளது. அதன்படி, சென்னை சென்டிரலில் இருந்து வருகிற ஜூன் 3,4,5,6,9,10,11,21,26 மற்றும் ஜூலை 2, 5, 6 ஆகிய தேதிகளில் கர்நாடக மாநிலம் அசோகபுரம் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்-16021) ரத்து செய்யப்படுகிறது.
அதேபோல, அசோகபுரத்தில் இருந்து வருகிற ஜூன் 4,5,6,7,10,11,12,22,27 மற்றும் ஜூலை 3, 6, 7 ஆகிய தேதிகளில் சென்னை சென்டிரல் வரும் எக்ஸ்பிரஸ் ரெயிலும் (16022) ரத்து செய்யப்படுகிறது. சென்னை சென்டிரலில் இருந்து வருகிற ஜூன் 5,6,7,8,11,12,13, 23, 28 மற்றும் ஜூலை 4, 7, 8 ஆகிய தேதிகளில் கே.எஸ்.ஆர். பெங்களூருவிற்கு செல்லும் எக்ஸ்பி ரஸ் ரெயில் (12657) ரத்து செய்யப்படுகிறது.
மேலும், பெங்களூருவில் இருந்து வருகிற ஜூன் 4,5,6,7,10,11,12,22,27 மற்றும் ஜூலை 3, 6, 7 ஆகிய தேதிகளில் சென்னை சென்டி ரல் வரும் எக்ஸ்பிரஸ் ரெயிலும் (12658) ரத்து செய்யப்படுகிறது.
அதே போல், சென்னை சென்டிரலில் இருந்து கே.எஸ்.ஆர் பெங்களூரு செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்-12657) அடுத்த மாதம் 19-ந் தேதி 1 மணி நேரம் தாமதமாக கே.எஸ்.ஆர்.பெங்களூரு செல்லும்.
அதே போல, சென்னை சென்டிரலில் இருந்து கர்நாடகா மாநிலம் அசோகபுரத்திற்கு செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் (16021) அடுத்த மாதம் 22-ந் தேதி 1 மணி நேரம் 15 நிமிடம் தாமதமாக அசோகபுரம் சென்றடையும்.
பராமரிப்பு பணி காரணமாக எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

