மக்களே கவனம்..! சென்னையில் 3 நாட்களுக்கு குடிநீர் விநியோகம் நிறுத்தம்..!!
சென்னையில் இன்று முதல் 3 நாட்களுக்கு குடிநீர் விநியோகம் இல்லை என சென்னை குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது.
செம்பரம்பாக்கம் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் புதிய குழாய் இணைப்புப் பணி நடைபெறவுள்ளது. இதன் காரணமாக சென்னையில் இன்று முதல் 3 நாட்களுக்கு குடிநீர் விநியோகம் நிறுத்தப்படுவதாக சென்னை குடிநீர் வாரியம் அறிவித்திருக்கிறது. அதாவது சென்னையில் இன்று காலை 8 மணி முதல் ஆக.1 இரவு 10 மணி வரை குடிநீர் விநியோகம் நிறுத்தப்படுகிறது. அம்பத்தூர், அண்ணா நகர், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், வளசரவாக்கம், ஆலந்தூர், அடையாறு மற்றும் தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட சில பகுதிகளில் 3 நாட்களுக்கு குடிநீர் விநியோகம் இருக்காது என தெரிவித்துள்ளது.

மேலும், அவசரத் தேவைகளுக்கு லாரிகள் மூலம் (Dial for Water) குடிநீர் பெற்றுக்கொள்ள வாரியத்தின் https://cmwssb.tn.gov.in என்ற இணையதள முகவரியினை பயன்படுத்தி பதிவு செய்து கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. .
குடிநீர் இணைப்பு இல்லாத பகுதிகள் மற்றும் அழுத்தம் குறைவான பகுதிகளுக்கு குடிநீர் தொட்டிகள் மற்றும் தெரு நடைகளுக்கு லாரிகள் மூலம் வழங்கப்படும் குடிநீர் விநியோகம் எந்தவித தடையுமின்றி வழக்கம்போல் சீரான முறையில் மேற்கொள்ளப்படும் என்றும் குடிநீர் வாரியம் விளக்கமளித்துள்ளது.


