பயணிகள் கவனத்திற்கு..! இன்று மெமு ரயில் சேவையில் மாற்றம்..!

 
1

தினமும் லட்சக்கணக்கான பொதுமக்கள் ரயில் சேவையை பயன்படுத்தி வருகின்றனர். குறிப்பாக குறைவான கட்டணம், பாதுகாப்பான பயணம் என்பதால் அதிகளவில் ரயில் பயணத்தையே விரும்புகின்றனர். 

இந்நிலையில் அவ்வப்போது தண்டவாளங்கள் பராமரிப்பு பணிகள், சிக்னல் பணிகள், மற்றும் மேம்பாட்டு பணிகள் உள்ளிட்ட காரணங்களுக்கான முக்கிய வழித்தடங்களில் அவ்வப்போது ரயில்கள் முழுமையாக ரத்து செய்யப்படுவதும் பகுதியாக ரத்து செய்யப்பட்டு மாற்று வழித்தடத்தில் இயக்கப்படுவதும் வழக்கம். 

இந்நிலையில் திருச்சியில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருவதால் சில ரயில்களின் சேவை மற்றும் பகுதியாக ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதுதொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில்: காலை 9.45 மணிக்கு தாம்பரத்தில் இருந்து புறப்படும் தாம்பரம் - விழுப்புரம்  மெமு ரயில் ரயில் மற்றும் பிற்பகல் 1.40 மணி விழுப்புரம் - சென்னை கடற்கரை மெமு ரயில் விக்கிரவாண்டி - விழுப்புரம் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

அதேபோல் காலை 6.35 மணிக்கு புறப்படும் சென்னை எழும்பூர் - புதுச்சேரி மெமு ரயில் விழுப்புரம் - புதுச்சேரி இடையிலும், பிற்பகல் 3 மணிக்கு புதுச்சேரியில் இருந்து புறப்படும் புதுச்சேரி - திருப்பதி மெமு ரயில் புதுச்சேரி - முண்டியம்பாக்கம் இடையிலும் பகுதியாக ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.