சென்னை மக்கள் கவனத்திற்கு..! பெசன்ட் நகரில் போக்குவரத்து மாற்றம்..!

 
traffic

சென்னை காவல் துறை வெளியிட்டுள்ள அறிக்கை: 

பெசன்ட் நகர் அன்னை வேளாங்கண்ணி சர்ச் திருவிழா, இன்று முதல் செப்., 8ம் தேதி வரை நடக்கிறது. இதை முன்னிட்டு, இன்று, செப்., 7 மற்றும் 9 என, மூன்று நாட்களுக்கு போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது. 

போக்குவரத்து மாற்றம் :

சென்னை காவல் துறை வெளியிட்டுள்ள அறிக்கை:  திரு.வி.க., பாலத்தில் இருந்து பெசன்ட் அவென்யூ சாலை – பெசன்ட் நகர் – சாஸ்திரி நகர் செல்லும் வாகனங்கள், வழக்கம்போல செல்லலாம். மக்கள் கூட்டம் அல்லது போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டால் மட்டும் பெசன்ட் அவென்யூ சாலையில், வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படாது. 

அந்நேரத்தில் மட்டும், டாக்டர் முத்துலட்சுமி பூங்கா, எல்.பி., சாலை நோக்கி எம்.ஜி., சாலை, பெசன்ட் நகர், ஒன்றாவது பிரதான சாலை, சாஸ்திரி நகர், 11வது குறுக்கு சாலை வழியாக எம்.ஜி., சாலைக்கு செல்லலாம். தென் சென்னையிலிருந்து வரும் வாகனங்கள்: இ.சி.ஆர்., – ஓ.எம்.ஆர்., சாலைகளில் இருந்து திருவான்மியூர் சந்திப்பு வழியாக வரும் அனைத்து வாகனங்களும், அடையாறு பஸ் பணிமனை வரை சென்று, இடதுபுறம் திரும்ப வேண்டும். 

பின், இந்திரா நகர், 2வது அவென்யூ வழியாக சென்று இந்திரா நகர் முதல் பிரதான சாலை வழியாக எல்.பி., சாலையை அடையலாம். பேருந்துகள், வலது பக்கம் திரும்பி எம்.ஜி., சாலை வழியாக, சாஸ்திரி நகர் முதல் பிரதான சாலை வழியாக செல்லலாம். 

‘பார்க்கிங்’ பகுதிகள்: ஆல்காட் நினைவு மேல்நிலைப் பள்ளி, அறிஞர் அண்ணா அரசு மேல்நிலைப் பள்ளி, பெசன்ட் நகர் இரண்டாவது பிரதான சாலை, பெசன்ட் நகர் நான்காவது அவென்யூ, பெசன்ட் நகர் 17வது குறுக்குத் தெரு ஆகிய இடங்களில், வாகனங்களை நிறுத்திக் கொள்ளலாம். பொதுமக்கள், எலியட்ஸ் கடற்கரை மற்றும் சுற்றியுள்ள சாலைகளில் பயணத்தை தவிர்க்க வேண்டும். 

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.