பயணிகள் கவனத்திற்கு..!! ஆயுதபூஜையை முன்னிட்டு போத்தனூர், செங்கோட்டை, நெல்லைக்கு சிறப்பு ரயில்கள் இயக்க திட்டம்..!!
தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
சென்னை சென்டிரலில் இருந்து அக்டோபர் 16-ந் தேதி இரவு 11.55 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (வண்டி எண் 06023) மறுநாள் காலை 9.15 மணிக்கு போத்தனூரை சென்றடைகிறது. மறுமார்க்கத்தில், போத்தனூரில் இருந்து அக்டோபர் 17-ந் தேதி பகல் 2 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (06024) அன்று இரவு 11.55 மணிக்கு சென்னை சென்டிரலை வந்தடைகிறது.
இதேபோல், சென்னை சென்டிரலில் இருந்து அக்டோபர் 18-ந் தேதி இரவு 11.55 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (06033) மறுநாள் காலை 9.15 மணிக்கு போத்தனூரை சென்றடைகிறது. மறுமார்க்கத்தில், போத்தனூரில் இருந்து அக்டோபர் 20-ந் தேதி மாலை 6.15 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (06034) மறுநாள் காலை 3.35 மணிக்கு சென்னை சென்டிரலை வந்தடைகிறது.
18 பெட்டிகளை கொண்ட இந்த சிறப்பு ரெயில், பெரம்பூர், திருவள்ளூர், அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும்.
தாம்பரத்தில் இருந்து அக்டோபர் 19-ந் தேதி இரவு 11.55 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (06089) மறுநாள் மதியம் 12.15 மணிக்கு செங்கோட்டையை சென்றடைகிறது. மறுமார்க்கத்தில் செங்கோட்டையில் இருந்து அக்டோபர் 20-ந் தேதி மதியம் 3 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (06090) மறுநாள் காலை 3.20 மணிக்கு தாம்பரத்தை வந்தடைகிறது.
21 பெட்டிகளை கொண்ட இந்த சிறப்பு ரெயில் செங்கல்பட்டு, விழுப்புரம், விருத்தாசலம், அரியலூர், ஸ்ரீரங்கம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், சங்கரன்கோவில், கடையநல்லூர், தென்காசி ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும்.
இதேபோல், ஈரோட்டில் இருந்து அக்டோபர் 16-ந் தேதி மாலை 4 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (06145) மறுநாள் மதியம் 12.30 மணிக்கு திருநெல்வேலியை வந்தடைகிறது. மறுமார்க்கத்தில், திருநெல்வேலியில் இருந்து அக்டோபர் 20-ந் தேதி இரவு 11.40 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (06146) மறுநாள் காலை 10.30 மணிக்கு தாம்பரத்தை வந்தடைகிறது.
இதேபோல், சென்னை சென்டிரலில் இருந்து அக்டோபர் 19-ந் தேதி இரவு 11.50 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (06083) மறுநாள் மாலை 4.30 மணிக்கு கொல்லத்தை சென்றடைகிறது. மறுமார்க்கத்தில், கொல்லத்தில் இருந்து அக்டோபர் 20-ந் தேதி மாலை 6.45 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (06084) மறுநாள் காலை 11.35 மணிக்கு சென்னை சென்டிரலை வந்தடைகிறது.
இந்த சிறப்பு ரெயில்களுக்கான முன்பதிவு நாளை (அக்டோபர் 15) காலை 8 மணிக்கு தொடங்குகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

