மக்களே கவனம்..! சென்னைக்கு நாளை மிக கனமழை எச்சரிக்கை..!

 
1 1

அரபிக் கடல் பகுதியில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஏற்பட்டுள்ளதால் நாளை சென்னைக்கு மிக கனமழைக்கான ரெட் அலார்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில், மெரினா, சேப்பாக்கம், மயிலாப்பூர், புரசைவாக்கம், வளசரவாக்கம், கோயம்பேடு, விருகம்பாக்கம், போரூர், சென்ட்ரல், எழும்பூர், நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், கிண்டி, தி.நகர். குரோம்பேட்டை, பல்லாவரம், கீழ்கட்டளை, நங்கநல்லூர், மேடவாக்கம், மடிப்பாக்கம், ஆவடி, அம்பத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. காலையில் கனமழை பெய்த நிலையில் தற்போது பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருவதால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.