மக்களே கவனம்..! இன்று புதிய புயல் சின்னம் உருவாகிறது..!
Oct 18, 2025, 06:15 IST1760748333000
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை நேற்று முன்தினம் தொடங்கியது. இதையொட்டி தமிழகத்தில் வரும் 20-ம் தேதி வரை பல்வேறு இடங்களில் பலத்த மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்து இருந்தது. இந்நிலையில் இன்று காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்கிழக்கு அரபிக்கடல், லட்சத்தீவு பகுதிகளில் இன்று காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது. காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 48 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைய வாய்ப்பு உள்ளது. தென்கிழக்கு வங்கக்கடலில் வரும் 24-ந்தேதி காற்றழுத்த தாழ்வு உருவாகி மேற்கு - வடமேற்கு நோக்கி நகர வாய்ப்பு உள்ளது. இதனால் தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால், மாஹேவில் இன்று முதல் வரும் 21-ந்தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளது.


