கருவை கலைக்க முயற்சித்ததால் விபரீதம்- 17 வயது சிறுமி பரிதாப பலி

 
death death

திண்டுக்கல் மாவட்டம் அய்யலூரில் கருவை கலைக்க முயற்சித்ததால் உடல்நிலை பாதிக்கப்பட்ட 17 வயது சிறுமி திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

death

திண்டுக்கல் மாவட்டம், அய்யலூரில் வசித்து வரும் 17 வயது சிறுமி இவர் திண்டுக்கல்லில் உள்ள கல்லூரியில் முதலாமாண்டு கல்வி பயின்று வந்துள்ளார். இந்நிலையில் இவர் கர்ப்பமாகியுள்ளார். இதுகுறித்து பெற்றோரிடம் தெரிவிக்காமல் இருந்துள்ளார். 32 வாரம் கிட்டத்தட்ட 7 மாதம் பின்பு பெற்றோர்களுக்கு இது குறித்து தெரிய வர நாட்டு மருந்து மூலம் கருவை கலைக்க முயற்சி செய்ததாக கூறப்படுகிறது. இதனால் உடல்நிலை பாதிக்கப்பட்ட சிறுமி கடந்த 24ம் தேதி திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலுள்ள மகப்பேறு பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. 

இந்நிலையில் இன்று 28.10.25 மாணவி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வடமதுரை  காவல்நிலைய போலிசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் . 17 வயது சிறுமி கருவுற்றதற்கான காரணமான நபர் யார் என்பது குறித்தும், கருவை கலைக்க நாட்டு மருந்து வாங்கி வந்து உதவி செய்தது யார் என்பது குறித்தும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் மாணவி பயன்படுத்திய செல்போனை போலீசார் கைப்பற்றி கருவுற்றதற்கு காரணமானவர் யார் என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது